தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்
1. பி.எஸ்.கிருஷ்ஸ்வாமி ஐயங்கார்
2. மதுரை.ஏ.வைத்தியனாத ஐயர்
3. எல்.என்.கோபால்சாமி ஐயர்
4. னீதிபதி.வி.பாஷ்யம் ஐயங்கார்
5. கல்லிடைக்குறிச்சி பு.யக்ஞேஸ்வர சர்மா
6. கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர்
7. கல்லிடைக்குறிச்சி லஷ்மி சங்கர ஐயர்
8. ஜி.மகாதேவன்
9. தேவகோட்டை எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்
10. மானாமதுரை எஸ்.ராமஸ்வாமி ஐயர்
11. எஸ்.ராஜம் ஐயங்கார்
12. தேவகோட்டை ரங்கண்ணா
13. டாக்டர். ஆர்.காளமேகம் ஐயர்
14. மாயனூர்.கே.ஜி.சிவசாமி ஐயர்
16. ஜே.நடராஜ ஐயர்
17. பெரம்பலூர் நரசிம்ம ஐயங்கார்
18. அன்பில் ராஜகோபால ஐயங்கார்
19. டாக்டர். ராமச்சந்திர ஐயர்
20. டாக்டர்.பி.வி.முத்துகிருஷ்ண ஐயர்
21. டாக்டர் வி.வி.நாகநாத ஐயர்
22. தஞ்சை வி.பூவராக ஐயங்கார்
23. டாக்டர் எம்.கே.சாம்பசிவ ஐயர்
24. நாராயண ஐயர்
25. சின்னசேலம் கே.வெங்கடேச ஐயர்
26. டாக்டர் .பி.எஸ்.சீனிவாசன்
27. டாக்டர் .பி.எஸ்.ரகுராமன்
28. எஸ்.சோமசுந்தரம் ஐயர்
29. சேலம் வாஞ்சிநாத ஐயர்
30. திருச்செங்கோடு தியாகராஜ ஐயர்
31. நாமக்கல் ஏ.ரங்காச்சாரி
32. கோத்தகிரி ஜி.மகாதேவ ஐயர்
33. பி.என்.சங்கரநாராயண ஐயர்
34. கோபி ஸ்ரீகண்ட ஐயர்
35. கோபி வி.ராம ஐயங்கார்
36. மாயனூர் சாம்பசிவ ஐயர்
37. வை.சங்கரன்
என்ன சொல்ல வறீங்கன்னு தெரியலை. எங்க ஊருக்காரங்க மூணு பேரை வரிசையில் சேத்திருக்கீங்க. கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்களேன்.
ReplyDeleteராஜாஜி அவர்களை விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteஇன்னொரு விஷயம். ஒரு சென்ஸிடிவான விஷயத்தைத் தொட்டுள்ளீர்கள். வெறுமனே லிஸ்ட் போடுவதில் பயன் இல்லை. ஒவ்வொருவரும் என்ன செய்தனர் என்பதை இந்தத் தலைமுறையினருக்குக் கூற வேண்டும். இதற்கு பல பதிவுகள் போட வேண்டும், குறைந்த பட்சமாய் ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவு என்ற கணக்கில்.
முக்கியமாக தீவிர எதிர்ப்பை சந்திக்க வேண்டும். முடியுமா?
இந்தப் பின்னூட்டமும் என்னுடைய இந்தப் பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
nalladhu
ReplyDeleteovvoruvaraiyum patri siru kurippu koduthal nanraga irukkume!
பரவாயில்லையே இத்தனை பிராமணர்கள் தலித்துகளின்
ReplyDeleteமுன்னேற்றத்திற்காக உழைத்திருக்கிறார்கள் என்று அறியும்போது சந்தோஷமாகத்தான்
இருக்கிறது. அவர்களுக்கு நம்
நன்றி உரித்தாகுக.
ஆனாலும் அதோடு இதனுடன் தொடர்புள்ள இன்னொரு காரியமும்
கவனத்திற்கு வந்து தொலைக்கிறதே.
ஆரியர்கள் 'வந்தேறிகளா', இல்லை
இங்கேயே இருந்த 'தொல்குடி மக்களா'என்பது போன்ற
ஆராய்ச்சிக்குள் இப்போது நான்
நுழையவில்லை. ஆனால் சனாதன தர்மமும், அதன் விளைவாய்
இப்பூமிக்கென்றே வந்த சாபக்கேடான
வர்ணாச்சிரமும் அவர்கள் இச்சமூகத்திற்கு அளித்த கொடைகள்
என்பதில் எவ்வித தர்க்கமும் இருக்கப் போவதில்ல. அப்படிப் பிறந்த சாதிப் பிரிவுகளை அழிய விடாமல்
'காத்து, போற்றி, பேணி வந்ததில்
அவர்களுக்குள்ள 'பாத்தியதையை' யாரும் மறுக்க முடியுமா என்ன? இப்படிப் பேணி வளர்த்ததனால்
எத்தனை நூற்றாண்டுகளாக, வழி
வழியாக, காலம் காலமாக
தலித்துகளும், பிற தாழ்த்தப்
பட்டவர்களும் உயர்சாதிக்காரர்களுக்கு
ஊழியம் செய்து, அடிமைகளாய் கூனிக்
குறுகி, தங்களைத் தேய்த்துக்கொண்டு
அந்த உயர்சாதிக்காரர்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தங்கள்
ரத்தத்தையல்லவா சிந்தியிருக்கிறார்கள். தங்கள் 'தோலைச் செருப்பாகத்
தைய்த்து'என்பார்களே அது மிக
சத்தியமான ஒன்றல்லாவா?
இப்படி மேல் சாதிக்காரர்களுக்கு
உழைத்த, உழைக்க வைக்கப்பட்ட
தலித்துகள் எந்த்தனை கோடி
இருக்கும்?
இந்தப் பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்:
raapichai.blogspot.com
http://bhaarathi.net/sundara/?p=264
டோண்டு சார்,
ReplyDeleteமுதல்ல நீங்க ராசாசி தலித் முன்னேற்றத்துக்கு என்னத்த செய்தார்-னு ஒரு பதிவு போடுங்க.நானும் தெரிஞ்சுக்கிறேன்.
பெருமைப் பட்டுக்கொள்வதற்காகவோ குற்ற உணர்ச்சியினாலோ எழுதப்பட்டது அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களின் மீதுள்ள உண்மையான அக்கரைக்கு உதாரணம் காட்டுவதற்கும் பிராமணர்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் என்றும் சாதிப்பாகு பாட்டிற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்றும் சிலர் செய்யும் போலி பிரச்சாரத்தை உணரவைக்கவும் தான் பதிவு.
ReplyDeleteஏதோ ஒரு சிலரின் பெயரைக்குறிப்பிட்டு குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கும் முயற்சி அல்ல இது. எத்தனை பேர் என்பதைவிட அவர்களின் செயல் வீச்சு முக்கியமல்லவா? பாரதியை காட்டிலும் இராமானுஜத்தைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர்கள் பெரியாரைத்தவிர வேறு திராவிட தலைவர்கள் யாரும் இருக்கிறார்களா?
வர்னாசிரம தர்மத்தால்தான் இனவேற்றுமை ஏற்பட்டது என்று நாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம். உலகின் எல்லா மூலையிலும் இனத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன/இருக்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதற்கும், ஹிட்லரின் இனவெரிக்கும், கிறிஸ்துவத்தின் வேறு வேறு பிரிவினருக்கும் (இத்தாலியில் பிராடஸ்டன்டுகளுக்கெ மதிப்பில்லை, பெந்தெ கொஸ்தெ தாழ்த்தப்பட்ட பிரிவாகவே உள்ளது), அந்நிய நாட்டினறால் சிதறுண்டுகிடக்கும் போதும் ஈராக்கில் அடித்துக்கொள்ளும் ஷியா மற்றும் சுன்னி வேறுபாட்டுக்கும் வர்னாசிரம தர்மம்தான் காரணமா?
ஆக உலகெங்கிலும் பரவியுள்ள ஓர் சமூகவியல் நிகழ்வான் இன வேறுபாட்டிற்கு இங்கு வழங்கப்படும் பெயர்தான் சாதி. இது பரிணாம வளர்ச்சியால் மாறக்கூடியது. வளர்ந்த நாடுகளில் பெருமளவு ஏற்பட்டுவிட்ட இப்பரிணாம வளர்ச்சி நம் நாட்டில் கடந்த அரைநூற்றாண்டாக துரிதகதியில் நிகழ்ந்துவருகிறது.
ஆக இன்றைய சூழ்நிலையில் இதிலிருந்து விடுபடுவதற்கான் ஆக்கப்பூர்வமான செயல்களிலில் ஈடுபடவேண்டுமேயன்றி அரசியல்வாதிகளின் புரட்டுக்களை நம்பி அவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு பலியாகமல் காப்பதற்காக உண்மைகளை கூற முற்படுவதேயன்றி வேறு நோக்கமில்லை.
வேதம் புதிது திரைப்படத்தில் வருவது போல், " நாங்கள் கரையேரிவிட்டோம், நீங்கள் அங்கேயே நிற்கிறீர்களே" என்ற நிலையில் இருப்பதில் சம்மதமா?
ஜோ அவர்களே,
ReplyDeleteநீங்கள் உரிமையோடு எனது பதிவில் வந்து இடுகை இட்டதால் நானும் உரிமையோடு கேட்கின்றேன்.
இராஜாஜி அவர்களை இராசாசி என்று கூறும் நீங்கள் ஏன் ""ஜோ" என்ற வடமொழிப் பெயரையே வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. ஏன் "சோ" என்று வைத்துக் கொள்ளவில்லை?
இந்த இடுகையில் பின்னூட்டம் இட்டவர்கள் கேட்டபடி ஒவ்வொருவரைப் பற்றியும் மேலதிக விபரங்கள் கொடுக்க இயலவில்ல. விபரம் வேண்டுவோர், பார்க்க வேண்டிய புத்தகத் தொகுப்பு.
"அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்"
கிடைக்குமிடம்:
தாம்ப்ராஸ் பவுண்டேஷன்
6, முதல் மாடி, 'விஸ்வகர்மா'
245, ராமக்ருஷ்ணமடம் சாலை
மயிலாப்பூர்
சென்னை- 600004
தொ.பே: 24942569/24943989
விலை ரூ.500 (5 தொகுதிகள்)
இந்த இடுகையில் பின்னுட்டங்கள் இத்துடன் நிறுத்தப்படுகின்றன.