கச்சேரி ஆரம்பிக்க அரை மணிநேரம் இருந்ததால் யாரை மொக்கை போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒருவர் வந்தார். வந்தவர் நேராக் "என்னிடம், நீங்கள்தானே சிமுலேஷன்?" என்றார். "ஆஹா, நம்மை எப்படிக் கண்டுபிடிதார் இவர்?", என்று இன்ப அதிர்ச்சியில் இருந்த எனக்கு, பதில் சொல்ல ஒரு சில நிமிடங்கள் ஆனது. "ஆமாம், நான் தான் சிமுலேஷன். மன்னிக்கவும். உங்க்களைத் தெரியவில்லையே!" என்றேன்". தனது பெயர் "மாயா" என்ற மாயக்கூத்தன் கிருஷணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். "அது சரி. எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்' என்றதற்கு, "உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தின் அட்டையில் இருக்கும் போட்டோவை பலமுறை, உங்களது வலைப்பதிவில் பார்த்துளேன். அதனை வைத்தே கண்டுபிடித்தேன்" என்று மாயா சொன்னபோது, இவர்தான் அந்த 'அமெரிக்காவின் சி.ஐ.டி.சங்கரோ" என்று ஆச்சரியப்பட்டேன்.
பழகுவத்ற்கு இனிய மாயா, அவர்தம் நண்பர் கார்த்திக்கையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள்தாம் டல்லஸ்ஸின் "இணடியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமியினைத் திற்ம்பட நிர்வகித்து வரும் நிர்வாகிகளுள் சிலர்.
(களைகட்டிய கச்சேரி மேடை)
அன்றைய மாலை உன்னிக்கிருஷ்ணன் புண்ணியத்தால் அருமையாகக் கழிந்தது. அதிலும் குறிப்பாக, "மாரமணன் உமா ரமணன்" என்ற பாபநாசம் சிவன் அவர்களது ஹிந்தோள ராகப்பாடல் அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது. இந்தப் பாடல் சிவனையும், திருமாலையும் ஒரே நேரத்தில் அழகுற வர்ணிக்கும் பாடல் என்பது சங்கீதம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பாடலின் வரிகளும் பொருளும் தெரியவேண்டுவோர் 'லலிதா ராமின்' இந்தக் கட்டுரையில் அவற்றைக் காணலாம்.
வீடியோ குவாலிட்டியினைப் பொறுத்தருள்க.