Sunday, February 01, 2009

சமீபத்தில் படித்தவையும் மீள் வாசிப்பு செய்தவையும்

சமீபத்தில் படித்த மற்றும் மீள் வாசிப்பு செய்த புத்தகங்களுக்காக இந்த இடுகை.

படித்ததில் பிடித்தது குறித்துக் குறிப்பிடுவேன். நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

- சிமுலேஷன்

5 comments:

  1. சுஜாதா ஏரோப்ளேன் கற்றுக் கொண்ட அனுபவம்.

    என்னைப் பொறுத்தவரை நான் ஸோலோவைப் பற்றிக் கவலைப்படவில்லை. ராய் எல்லாம் கற்றுத் தந்தார். முதலில் டேக் ஆஃப் கற்றுத் தந்தார். (மூக்கை எத்தனையோ டிகிரியில் வைத்துக்கொள்ளச் சொன்னார். வைத்துக் கொண்டேன். "உன் மூக்கு இல்லை முட்டாளே; ஏரோப்ளேனின் மூக்கு!")

    - "மிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம்"

    ReplyDelete
  2. கார்டு கவர்களில்
    இந்தி எழுத்தை
    நன்றாய் அடித்து
    மசியால் மெழுகி
    அஞ்சல் செய்யும்
    தனித்தமிழ் அன்பர்
    "பாபி" பார்த்ததும்
    இருடிக் கபூரும்
    இடிம்பிள் கபாடியாவும்

    (ரகரமும் டகரமும் மொழி முதல் வாரா)

    அருமையாய் நடித்தனர்.....

    (என டயரியில் எழுதுகிறாராம்)

    - ந. ஜெயபாஸ்கரன்

    -- "மிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம்"

    ReplyDelete
  3. சமீபத்தில் படித்தது. மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்கள் எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்"

    http://desikann.blogspot.com/2005/05/blog-post_26.html ல்

    ஹரன்ப்ரசன்னா சொன்னது போல, சில சமயங்களில் சிறுவர்கள் கதை போல இருந்தாலும், நல்ல நகைச்சுவை, (சபாபதி படம் போல). மணிப்ரவாளமான நடை.

    பதித்து முடித்தவுடன், தமிழின் முதல் நாவலை நாமும் படித்துவிட்டோமே என்ற சிறு கர்வம் வந்தது பொய்யில்லை.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  4. - 1. இரயில் புன்னகை
    - 2. குதிரை
    - 3. அரை வைத்தியன்
    - 4. முழு வைத்தியன்
    - 5. சேவகி
    - 6. பேட்டி
    - 7. ஜனகி சாகவில்லை
    - 8. பாரிஸ் தமிழ்ப் பெண்

    சுஜாதாவின் "இரயில் புன்னகை" சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறு கதைகள்.

    ReplyDelete
  5. 1. ஜெயமோகனின் "விசும்பு" - அறிவியல் புனைகதைகள்

    2. ரா.கி.ரங்கராஜனின் "க்ரைம்"

    - ஜூலை- 2009

    ReplyDelete