Friday, January 01, 2010

மயிலாப்பூர் ஆலமரங்கள் - விவரணப் படம்

கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் "மயிலாப்பூர் கொண்டாட்டங்கள்" நடைபெற்று வருவதனை முக்கால்வாசி மயிலாப்பூர்வாசிகளும் அறிந்து, அதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் வழக்கமே. அதில் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் குறித்த விவரணப் படங்கள் யாரேனும் எடுத்திருந்தால் அதன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மயிலாப்பூர் டைம்ஸின் வின்சென்ட் டிசோசா கேட்டிருந்தார்.

'இதனை முயற்சித்துப் பார்த்தால்தான் என்ன?' என்றெண்ணி, நானும் ஒரு விவரணப் படமமெடுத்துள்ளேன். மயிலாப்பூர் ஆலமரங்கள் என்ற இந்த படத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று எல்லாக் கருத்துக்களைக் கூறுங்கள்.

சிறிது நேரம் buffering ஆன பின்பு படத்தினைப் பார்க்கவும். இல்லையென்றால் voice synchronization அவ்வளவு சரியாக வராது.

- சிமுலேஷன்



6 comments:

  1. அட! இத்தனை ஆலமரங்களா?

    நகரத்துக்குள்ளே இருப்பதால் கடைசி மரம்தவிர மற்றவையெல்லாம் விழுதுவிட்டு வளரவில்லை என்று எண்ணுகின்றேன்(-:

    படம் அருமையாக வந்துள்ளது. பின்னணியில் ஒலிக்கும் அந்த பியானோ இசை இன்னும் கொஞ்சம் மிருதுவாக ஒலித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    இனிய பாராட்டுகள்.

    (எங்களுக்குப் போட்டியாக இருந்தாலுமே:-)))))

    ReplyDelete
  2. வீடியோ எடிட் செய்து பின்னணி இசை மற்றும் குரல் சேர்த்துப் பதிவு செய்ய உதவும் Softwareகள் என்னென்ன என்பது பற்றிச் சொல்லுங்களேன். நானும் வீடியோ எடுப்பதில் சிறிது ஆர்வம் கொண்டவன். :-)

    ReplyDelete
  3. துளசியம்மா,

    வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!

    நாகேஸ்வரராவ் பூங்கா, டீமாண்டீ காலனி பூங்கா, (மாண்டியத் காலனி என்று தெரியாமல் கூறியிருப்பேன்) செயின்ட் மேரீஸ் தெருவில் உள்ள பொள்ளாச்சி சக்தி மஹாலிங்கம் வீட்டில் உள்ள ஆலமரங்கள் எல்லாமே நன்கு வளர்ந்து விழுதுவிட்டவைதான்.

    பின்னணி இசை குறித்த உங்கள் கருத்து உண்மைதான்.இன்னமும் நன்றாகச் செய்திருக்கலாம். ஒரே நாளில் முடிக்க வேண்டுமென்ற வெறியும், கட்டாயமும்.

    அப்புறம் உங்களுக்கும், கோபால் சாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  4. யோகேஸ்,

    நான் இந்த மென்பொருட்கள் குறித்துப் பெரிதும் ஆராய்ச்சி செய்யவில்லை.

    புதிதாக வாங்கிய கணினியில் இருந்த Windows Movie Maker என்ற மென்பொருளை மட்டுமே பயன்படுத்தினேன்.

    ஒருவேளை சுடுதண்ணி (http://suduthanni.blogspot.com) போன்ற பதிவர்கள் உங்களுக்கு உதவக்கூடும்.

    உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  5. மிகச் சுவாரசியமாக இருக்கிறது.
    பிரபலமான மயிலாப்பூர் கிரிமினல் வக்கீல்கள், சிவில் வக்கீல்கள், பற்றியும் வீடியோ எடுக்கலாம்.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  6. நல்ல முயற்சி. நான் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறேன். குரல் பதிவில் அடிக்கடி 'இந்த ஆலமரம்' என்ற வார்த்தைகள் அடிகடி வந்து எரிச்சலை தருகிறது. வீடியோவுக்கு ஏற்ற சிக்கன வார்த்தைகளை பயன்படுத்தலாம். வீடியோ எடுக்கும் போது இன்னும் சுவாரஸ்யம் வருவது மாதிரி சில காட்சிகள் எடுத்திருக்கலாம். ஆலமரத்தை சுற்றி கடவுள் படங்களை வைத்து ஆன்மீகம் என்ற பெயரில் பொருளீட்டும் வணிகம், மக்களின் அலட்சியம் ஆகியவைகளை நச்சென பதிவு செய்யலாம். வாழ்த்துக்கள். மெலட்டூரான்.

    ReplyDelete