Thursday, May 31, 2012

நீங்கள் 1960-1970க்குள் பிறந்தவரா? அப்படியென்றால்...


நீங்கள் 1960-1970க்குள் பிறந்தவரா? அப்படியென்றால்...
  • உங்களது பள்ளிக் கால ஞாயிற்றுக் கிழமை எண்டர்டெய்ன்மெண்ட் - ஒலிச் சித்திரம் - ஆல் இண்டியா ரேடியோ.
  • பரபரப்பான செய்திகளுக்குக் காத்திருந்து நீங்கள் கேட்ட குரல்கள் -  - ஜெயா பாலாஜி, பத்மனாபன், செல்வராஜ், சரோஜ் நாராயணஸ்வாமி - ஆல் இண்டியா ரேடியோ / ஆகாசவாணி செய்தி வாசிப்பாளர்கள்.
  • நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகர் என்றால் சிசாஜியை விரோதியாகவும், சிவாஜி ரசிகராக இருந்தால், எம்.ஜி.ஆரை விரோதியாகவும் பார்த்திருப்பீர்கள்.
 
  • உங்களுக்குப் பிடித்த ஆக்ஷன் ஹீரோ - தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர்.
 
  • கல்யாணத்துக்கு அப்புறம் நீங்கள் போட்டுக் கொண்ட ஆபரணம் - LIC மோதிரம்.

  • தமிழ்த் திரை வரலாற்றில் பெரும் புரட்சி ஏற்படுத்திய படம் - ஒரு தலை ராகம்.
 
  • தெரிந்த மூன்று மோட்டார் பைக்குகள் - ராஜ்தூத், புல்லட், யெஸ்டி.
  • தெரிந்த ஸ்கூட்டர்கள் - வெஸ்பா, லாம்பரெட்டா.
  • பார்த்த ஒரே தொலைக்காட்சி சானல் - தூர்தர்ஷன்.
  • தெரிந்த ஒரே ஹிந்தி சீரியல் - ஜுனூன்.
  • உங்களது வெள்ளிக் கிழமை இரவு எண்டர்டெய்ன்மெண்ட் - ஒளியும் ஒலியும் - தூர்தர்ஷன். 
  • கல்லூரி கால பேவரைட் ட்ரெஸ் - பெல்பாட்டம் பேண்ட் - பாபி காலர் ஷர்ட், பட்டை பெல்ட்.
 
  • பெரிதும் பயப்பட்டது - டெலி கிராம். (Start Immediately)
  • எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் பார்த்தது - மாலை முரசு.
 
  • எஸ்.எஸ்.எல்.சி விடுமுறையில் சேர்ந்தது - டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட். 


  • கல்லூரி வாழ்வில் செய்த புரட்சி - பஸ் டே (Bus Day)  கொண்டாடினது. மற்ற கல்லூரிகளுக்குக் கூட்டமாகச் சென்று அவர்கள் கல்லூரிகள் மூடச் செய்தது.
  • குடும்பத்துடன் செய்த பெரிய தேசிய கடமை - சினிமா முடிவில் "ஜனகனமண" தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றது.
  • போட்டோ எடுத்தால் கொடுக்கும் போஸ் - கால்களை அகட்டி நின்று கொண்டு கைகளைக் கட்டிக் கொள்வது.
  • முணுமுணுத்த தெய்வீகப் பாடல்கள் - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, ஆயர்பாடி மாளிகையில் மாயக்கண்ணன்.

வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

- சிமுலேஷன்

18 comments:

  1. அது எப்படி 1942 ல் பிறந்த எனக்கும் நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே (ஒன்றைத் தவிர )பொருந்துகிறது !!

    இதற்குக் காரணம் ஒரு கல்சரல் எவல்யூஷன்.

    1970 வரை இருந்த இந்தியா வேறு. 1970 முதல் 1990 வரை இந்திய மனம் கொஞ்சம் மாறுபட்டாலும்
    பழையனவற்றிலிருந்து பிறளவில்லை.

    1990 முதல் இந்தியாவின் உலகமயமாக்கும் கொள்கை யும் அதன் பின் விளைவுகளும்
    2000 முதல் பிறந்த குழந்தைகளின் மனோபாவத்தில் நன்றாகவே தெரிகிறது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. MGR AND SHIVAJI TWO FAMOUS PERSONALITIES YOU HAVE MISSED. fOR MAKING CALLS WE HAVE BOOKED TRUNK CALLS AND WAITED FOR MORE THAN TWO DAYS.bUT LIFE WAS SO HAPPY THAT NOBODY CAN DENY THAK U FOR RE COLLECTING SOME OF THE OLD BLUES k VENKAT .

    ReplyDelete
  3. //பெரிதும் பயப்பட்டது - டெலி கிராம். (Start Immediately)//

    ​நான் சிறுவயதாக இருந்தபோது(1976) ஒரு வீட்டின் ஆம்பிள்ளை பெயருக்கு தந்தி அவரோ அலுவலகம் சென்றிருந்தார்.தந்தியை பெற்றுக் கொண்டவர் அவரின் வயதான தாயார். தந்தி என்றாலே துக்க செய்தி என்பதாக அறிந்து வைத்திருந்த அந்த பாட்டி சமையல் செய்திருந்த சோறு,சாம்பார் இவைகளை கீழே ஊற்றி பாத்திரத்தை கழுவி தனக்கும்,தன் மகனுக்கும் சில உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தயாராக மகன் வருகைக்காக ( அந்த காலத்தில் யார் வீட்டிலும் போன் எல்லாம் கிடையாது) காத்திருந்தார். அவருக்கு துணையாக சில ஆங்கிலம் தெரியாத பெண்மணிகளும் அவர் வீட்டுக்கு சென்று அவருக்குத் துணையாக காத்திருந்தனர்.மகன் வீட்டுக்கு வந்ததும் தந்தியை படித்து விட்டு தம் தாயிடம் என் மனைவியும் ,மகளும் ​நாளை ஊரிலிருந்து புறப்படுவதாக என் மாமனார் தந்தி அனுப்பியுள்ளார் என தெரிவித்தார். அன்றைய தினம் தெருவே இதை கூடிப்பேசி மகிழ்ந்தது. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவ ஜோக்.

    //எஸ்.எஸ்.எல்.சி விடுமுறையில் சேர்ந்தது - டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட். //

    இ​து பலஆண்களுக்கு சில பெண்களுக்கு, பல பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி க்கு அப்புறம் தையல் கிளாஸ்.

    எ​ன்றும் அன்புடன்,
    HBA.

    ReplyDelete
  4. சூரி அவர்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. வெங்க்கட் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி. எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்தும் கூறிப்பிட்டுவிட்டேன்.

    ReplyDelete
  6. HBA வருக்கைக்கு நன்றி. டெலிகிராம் குறித்த சம்பவம் சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete
  7. மேலும் எஙகளுடைய பேட்ச்சும் எஙகளுடைய சீனியர் பேட்சும் எஸ் எஸ் எல் சி ஒன்றாக எழுதியதும் இனிமையான நினைவுகள் இன்று பி யூ சி இல்லை

    ReplyDelete
  8. Hi,

    Everything matches to me.
    Thank you
    Nalina

    ReplyDelete
  9. மலரும் நினைவுகள் நல்லாயிருக்கு. ஒரு திருத்தம்.ஜுனூன் தொண்ணூறாம் வருஷத்தில் வந்தது. அதுக்கு முன்னாடி, ஹம்லோக் ,விக்ரம் அவுர் வேதாள் இதெல்லாம் ரொம்ப பாப்புலர்.

    ReplyDelete
  10. நான் 1985 இல் பிறந்தவர், ஆனால் எனக்கு கூட பிடித்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி. என் தந்தை அவள் ஒரு பெண் என்று சொன்ன போது நான் அதை நம்ப முடியவில்லை.எனக்கு மற்ற செய்தி வாசகர்கள் சவிதாவை குமார், சிவா ராமன், ராஜாராம், ஹேமா sathiyamoorthy குரல்கள் கூட ஞாபகம்.

    ReplyDelete
  11. நான் 1985 இல் பிறந்தவர், ஆனால் எனக்கு கூட பிடித்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி. என் தந்தை அவள் ஒரு பெண் என்று சொன்ன போது நான் அதை நம்ப முடியவில்லை.எனக்கு மற்ற செய்தி வாசகர்கள் சவிதாவை குமார், சிவா ராமன், ராஜாராம், ஹேமா sathiyamoorthy குரல்கள் கூட ஞாபகம்.

    ReplyDelete
  12. you have to include ceylon radio and the memorablevoices of Sri.Abdul hamid,Raja and Mayil ravanan.

    ReplyDelete
  13. you have to include ceylon radio and the memorablevoices of Sri.Abdul hamid,Raja and Mayil ravanan.

    ReplyDelete
  14. நான் பிறந்தது 1967ல். கண்டிப்பாக அட்சரம் பிசகாமல் அத்தனையும் நான் உணர்ந்தவை. உணர்ந்திருந்தபோதும் எல்லோருக்கும் அதே மாதிரியான உணர்வு தோன்றியிருக்கும் என நினைக்கவில்லை. படிக்க படிக்க அட ஆமாம் இல்ல என்ற பிரமிப்பு எழுந்தது.

    ReplyDelete
  15. நான் பிறந்தது 1967ல். கண்டிப்பாக அட்சரம் பிசகாமல் அத்தனையும் நான் உணர்ந்தவை. உணர்ந்திருந்தபோதும் எல்லோருக்கும் அதே மாதிரியான உணர்வு தோன்றியிருக்கும் என நினைக்கவில்லை. படிக்க படிக்க அட ஆமாம் இல்ல என்ற பிரமிப்பு எழுந்தது.

    ReplyDelete
  16. நான் பிறந்தது 1967ல். அது எப்படி எல்லாமே சரியாக இருக்கு. நான் உணர்ந்த அத்தனையும் அந்தத் தலைமுறையும் உணர்ந்த விஷயம் என்கிற போது மகிழ்ச்சியா இருக்கு. செய்தி வாசிப்பாளர் ஜெயா பாலாஜி குரலுக்கு அடிமையாகி வானொலி கேட்க வந்தவன் நான். தேர்தல் செய்திகளை விடிய விடியக் கேட்பது ஒரு தனி அனுபவம். ஒவ்வொரு விஷயமாக ஒரு பேப்பரில் எழுதி வைத்து சரி பார்த்து முழு விவ்ரம் வரும் வரை பொறுமை இல்லாமல் தவிப்பது தனி சுகம். அது இந்தத் தலைமுறையினருக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!

    ReplyDelete