Sunday, December 27, 2015
அறநிலையத் துறை சுற்றறிக்கை
ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெற்றியில் திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது என்பது இந்துப் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளம். எனவே, இந்துக் கோயிலுக்கு வருபவர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நெற்றியில் திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு வராவிடில் அனுமதி இல்லை என்றும் சொல்லலாம்.
Saturday, October 24, 2015
என் பெயர் விஸ்மயா - 4 - (குறு நாவல்)
என் பெயர் விஸ்மயா - 2
என் பெயர் விஸ்மயா - 3
வசுமதி அனந்துவைப்
பார்த்துக் கண்ணசைக்க, அனந்து
"விஸ்மயா, மாப்ளைக்கு
ஸ்வீட் எடுத்துண்டு வாம்மா" என்றார்.
என் பெயர் விஸ்மயா - 3
இந்த வருஷம் தீபாவளி
ரொம்ப விசேஷம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னமே பரத் மாமா குடும்பத்துடன்
அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். அனதராமனும் தன தம்பி, மச்சினர் எல்லோரையும்
தீபாவளிக்கு முதல் நாளே வரச் சொல்லியிருந்தார். ஒவ்வொருவராக வர, வர தீபாவளி களை கட்டத்
தொடங்கி விட்டது.
"குரு, என்ன இருந்தாலும்
தீபாவளி மாதிரி எந்தப் பண்டிகையும் வராதுரா. நாமெல்லாம் சின்னப் பசங்களா
இருந்தப்போ, ஒரு வாரத்துக்கு
முன்னாடியே தீபாவளி ஜொரெல்லாம் வந்துரும். இப்பப் பாரு, தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் தான்
லீவு."
"தீபாவளிலேயே ஸ்பெஷல் மொத நாள்தான்.
ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்புட்டுட்டு, பட்டாசெல்லாம் வெடிச்சுட்டு, மணிக் கணக்கா ஒக்காந்து அரட்டை அடிக்கறோமே, அந்த சுகம் வரவே வராதுரா. அதிலேயும் இந்த வருஷம் பரத் வேற
குடும்பத்தோட, அமெரிக்காவ்லேந்து
வந்த்ருக்கான். இந்த வருஷம் சூப்பர் தீபாவளிதான்."
"ஆபீஸ்லே ஒரு நாள் லீவு விட்டாலும், நாம எல்லோரும் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு, வருஷா வருஷம் யாராவது
ஒர்த்தர் வீட்ல தீபாவளி கொண்டாடறோமே, அது தாண்டா செம்ம."
அனந்து விடு தீபாவளியில்
அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. அருண் ஹாலிலேயே ஒரு பட்டாசு வைத்து, அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான்.
"பை த வே. விஸ்மயாவ
எங்க காணோம்? அவளும் ரெண்டு
நாள் லீவு போடுவாளே. ஒரு வேலை இந்த செக்யுலர் காலேஜ்ல லீவு கொடுக்கலியோ?
"பரத் அண்ணா. விஸ்மயா இப்பத்தான் போன் பண்ணினா. ஒரு பிப்டீன் மினிட்ஸ்லெ
வந்துடுவாளாம்."
மணி ஆறாயிற்று. ஆறரையும் ஆயிற்று.
"என்னடா இது?. அவளுக்குப்
போனைப் போடேண்டா! அவ, வீட்டில இல்லாம களையே இல்ல."
"இல்ல சித்தப்பா, மறுபடியும் அவளே போன் பண்ணிட்டா. டிராபிக் ஜாமாம். 'இன்னம் பத்து நிமிஷத்லே வீட்லே இருப்பேன்னு' சொல்லிட்டா.
கரெக்டாக மணி ஏழாக காலிங்
பெல் அடித்தது.
"வா. ஹரி. வா. எல்லோருமே இப்ப வீட்லேதான் இருக்காங்க."
"ஹாய் டூயிங்" என்று சொல்லி பரத் அந்த இளைஞனை வரவேற்றார்.
"உட்காருப்பா. என் பேரு அனந்து. விஸ்ம யாவோ அப்பா."
"சார்.. என் பேரு ஹரி.."
"வெய்ட். வெய்ட். ஹரி.. நானே இன்ட்ரட்யூஸ் பண்றேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டீ, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, ரவி, ஷைலூ எல்லோரும்
கேட்டுக்கோங்க. இதுதான் ஹரி. எங்க காலேஜ்லே கல்சுரலுக்குப் பாட வந்தார். அப்பேல்லேர்ந்து
எங்களுக்குள் பழக்கம். அவர் என்னை விரும்பினார். அதவிட நான் அவர அதிகமா
விரும்பினேன். மே மாசம் ரெண்டு பெரும் கோர்ஸ் முடிக்கறோம். அதுக்கப்புறம் ஒரு ஆறு
மாசத்லே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.
ஆறு மாசத்லே நீங்க எப்ப
தேதி சொன்னாலும் சரி."
எல்லோரும் என்ன பேசுவது
என்று தெரியாமல் திரு,திருவென்று முழித்திருக்க சித்திதான் முதல் குரல் கொடுத்தாள்.
"வஸு. நீ இப்படிப் பண்ணுவேன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கலை!"
"சித்தி... ஹரிக்கு எந்தக் கொறையும் கிடையாது. எம்.ஏ சோஷியல் சைன்ஸ்
படிச்சுட்டிருக்கார். அலப்பி வெங்கடேசன் சார்கிட்ட பா ட்டு கத்துகீட்டு இருக்கார்.
டீ டோட்டலர். ஒங்களால ஹரிகிட்ட எந்த ஒரு கொறையும் கண்டு பிடிக்க முடியாது. ஆனா, நானா…. என்னோட
மாப்ளையத் தேடிக்கிட்டேன்னு ஒங்களுக்கெல்லாம் கோபமாயிருக்கும். நானா இப்படி ஒரு
முடிவு எடுக்காட்டி, நீங்கள்ளெல்லாம் ஒரு நல்ல பையனை எனக்காக செலெக்ட் பண்ணியிருப்பீங்க. ஆனா அவனை
எனக்குப் பிடிச்சுருக்குமான்னு தெரியாது. சின்ன வயசுலேந்து எனக்காக பெஸ்ட் திங்க்ஸ்தான்
செலெக்ட் பண்ணீயிருக்கீங்க. ஆனா அது ஒங்க பாய்ண்ட் ஆப் வியுலே. என்னோட பாய்ன்ட்
ஆப் வியுவ்லேந்து யாருமே எப்பவுமே யோசிச்சதில்லே.
அட்லீஸ்ட் எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்த பின்னாடியாவது,
யாரவது, "வஸு, உனக்கு இந்தப் பாவாடை பிடிச்சிருக்கா? இந்த மொபைல் மாடல்
பிடிச்சுருக்கா?, இந்த மாடல் கார் பிடிச்ச்சுருக்கா?ன்னு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கேட்டிருந்தாக் கூட, “ஆஹா, என்னையும் மதிச்சு ஒரு கேள்வி
கேட்டாங்களேன்னு சந்தோஷப்பட்டிருப்பேன். என்னோட லைப் பார்ட்னர் விஷயத்லையும்
இந்தத் தப்பு நடந்துடக் கூடாதுன்னுதான் நெனைச்சேன். அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுக்க
வேண்டியதாப் போச்சு"
"அனந்து. விஸ்மயான்னு பேர் வெச்சியேடா. கரெக்டா ப்ரூவ் பண்ணிட்டா?"
"ஆமாம், பாட்டீ, அண்ணா பிறந்து பத்து
வருஷம் கழிச்சு ஸர்ப்ரைஸா நான் பொறந்ததால எனக்குப் 'விஸ்மயா'ன்னு பேர் வச்சதாச் சொல்லுவே. ஒவ்வொரு முறையும் எனக்கு யாராவது சர்ப்ரைஸ்
கொடுக்கும் போதும் என் பேரே தான் எனக்குப்
பெரிய எதிரின்னு நினைச்சுப்பேன். ஆனா, இன்னிக்குத்தான்
ஒங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஸர்ப்ரைஸ் கொடுத்ததிலே என் பேரே எனக்கு இப்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு."
என் பெயர் விஸ்மயா - 3 - (குறு நாவல்)
சித்தப்பா, சித்தி, மாமா, மாமி எல்லோரும் ஒரே
நேரத்தில் வீட்டிற்கு வருவது அபூர்வம். அதுவும் ஞாயிற்றுக் கிழமை மாலையில் டி.வி.
படங்களைப் பார்க்காமல் வந்திருக்கிறார்கள் என்றால் ஏதோ விசேஷம் கண்டிப்பாக
இருக்கும்.
"வசு, ரவி என்னமோ
எங்களையெல்லாம் வரச் சொல்லியிருக்கான். ஆனா, அவனைக் காணோமே! எங்கே போயிட்டான்?"
"சித்தப்பா. இப்பத்தான்
ரவி போன்பண்ணினான். இன்னமும் பத்து நிமிஷத்லே வீட்லே இருப்பேன்ன்னுட்டு"
"எங்கே அவன் பைக்
வாசல்லே தான் இருக்கு. பஸ்லே எல்லாம் போக மாட்டாரே நம்ம மாப்ள!"
ஒவ்வொருவராக கலாய்க்க
ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் ரவி.
"எங்கேடா போயிட்டே? பைக் வாசல்ல இருக்கு!"
"மாமா. அதெல்ல்லாம்
அப்புறம் சொல்றேன். இப்ப எல்லோரும் வாசலுக்கு வாங்கோ... பாட்டி நீயும் வா...
தாத்தா நீயும் வா. அப்புறமா பேப்பர் படிக்கலாம்... விஸு நீ முன்னாடி
வா"
வாசலுக்கு வந்து
பார்த்தால் சிவப்பு நிறத்தில் ஒரு மாருதி சுஸுகி.
"அடேய்! என்னடா இது? யார் கார்ரா இது?
"கொஞ்சம் வெய்ட்
பண்ணு பாட்டி. சொல்றேன்."
"விஸு இப்படி இங்கே
வா. கையை நீட்டு. இந்தா சாவியைப் பிடி."
"ஹிப் ஹிப்
ஹுர்ரே...ஹிப் ஹிப் ஹுர்ரே. ஹிப் ஹிப் ஹுர்ரே"
வயது வித்தியாசம்
இல்லாமல் எல்லோரும் கும்பலாகக் கத்தினார்கள்.
"இந்த மாதிரி ஒரு
அண்ணா எனக்கும் இருந்திருக்கலாம்" என்றாள் கௌரி மாமி.
"அடுத்த
வாரத்லேர்ந்து விஸு காலேஜுக்குப் போகப் போறா. பஸ்லெதான் போவா. ஆனா, ஒரு ஆத்திர அவசரத்துக்குன்னு ஒரு கார் இருந்தா நல்லாத்தானே
இருக்கும்."
"பஸ் இல்லேன்னா
ஆட்டோ இருக்கேடா" என்று இழுத்த சித்தப்பா, யாரும் அதனை ரசிக்கவில்லை என்று தெரிந்ததும் அந்தர் பல்டி அடித்தார்.
"விஸு, உனக்கு இந்த ரெட் கலர் கார் நல்ல மேட்சாக இருக்கும்"
அனந்து பெருமையாக ரவியைப்
பார்த்தார்.
'என்னோட மகனை நெனைச்சா
எனக்குப் பெருமையா இருக்கு. இவ்வளவு சின்ன வயசிலே யாரும் கார் வாங்கினது கெடையாது.
அதுவும் கார் வாங்கி தங்கைக்குப் பிரசன்ட் பண்ணினது கிடையாது.'
"கார் சாவியை
விஸுகிட்டெ கொடுத்திட்டே. ஆனா, யார் பேர்ல கார்
வாங்கியிருக்கேடா?" இது நடராஜா மாமா.
"மாமா, செந்தில் ரஜினி படத்லே சொன்ன மாதிரி ஒங்களுக்கு ஞாபகம் வந்த்துடுத்தா? 'மாப்ள இவர்தாம்; ஆனா அவர்
போட்டிருக்கிற சட்டை என்னோடது' அப்படீனு
சொல்வேன்னு நெனச்செளா? ஆர்.சி புக்
விஸ்மயா பேர்லதான் இருக்கு. விஸு…. இது ஒன்னோட
கார். ஒன பேர்ல இருக்கிற சொந்தக் கார்!"
"அப்படின்னா அவ
பேப்பர்லே எல்லாம் சைன் பண்ணியிருந்திருக்கனுமே? சர்ப்ரைஸா இருந்திருக்காதே!. எப்டி மேனேஜ்
பண்ணினே?
"மாமா, அவதான் எல்லாப் பேப்பர்லயும் சைன் பண்ணிக் கொடுத்தா. ஆனா, அவளுக்கே அது தெரியாது"
"கரெக்ட். ஒரு மாசம்
முன்னாடி ரவி ஏதேதோ பேப்பர்லே கையெழுத்து வாங்கினான். ஆனா, அது காருக்காகத்தான்னு ஒரு போதும் நெனைக்கவேல்லே."
"விஸு. காலேஜ்லேர்ந்து
திரும்ப போகும்போது எங்களையும் கண்டுக்கோ. லிப்ட் கேட்டாக் கொடுப்பதானே?"
"சித்தி. எனக்கே
கார் ஓட்டத் தெரியாது. நான் எங்கே ஒங்களுக்கு லிப்ட் கொடுக்கறது?"
"ஹேய் விஸு, அதுக்கும் எற்பாடு பண்ணியாச்சு. நாளைலேர்ந்து ‘பிரம்மாஸ் டிரைவிங் ஸ்கூல்’லெர்ந்து சுகந்தின்னு ஒரு லேடி வந்து உனக்குக் கார் டிரைவிங் கத்துக்
கொடுப்பாள். ஒரே வாரத்லே ப்ராக்டிஸ் பண்ணிடலாம்.
"ரவி ஆட்டோ கியர்னு
ஒண்ணு இருக்காமே? க்ளட்ச், கியர்னு எதுவுமே மாத்தாம அப்படியே ஈஸியா ஓட்டிண்டு போலாமாமே?"
"சே… அதெல்லாம் ஒத்து வராது. பெட்ரோல் வேற எக்கச்சக்கமாக்குடிக்கும்.
இதுதான் உனக்கு பெஸ்ட்."
மறு நாள் காலை ஆறு
மணிக்கு காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தாதாள்
விஸ்மயா.
"வாங்க..வாங்க..
சுகந்தி மேடம்தானே? குட் மார்னிங்"
"இல்ல. இல்ல.
சுகந்திக்கு ஒடம்பு சரியில்ல. நான் மணிமேகலை. குட் மார்னிங் மேடம்"
மணிமேகலை விஸ்மயாவை
சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே உள்ள மைதானதுக்குக் கூட்டிச் சென்றாள். இடம் மாறி
விஸ்மயாவை டிரைவர் சீட்டில் அமரச் செய்தாள்.
"சும்மா க்ளட்சை
ரிலீஸ் பண்ணி, ஆக்சிலரேட்டரை
ஸ்லைட்டா பிரஸ் பண்ணுங்க."
வண்டி நகர ஆரம்பித்தது.
ஆனால் செகண்ட் கியர் மாற்ற முயற்சிக்கையில் 'பொக்'கென்று நின்றது. ஒரு மணி நேரத்தில் பதினைந்து
முறை வண்டி நின்றது.
"மேடம்.. ஆட்டோ
கியர்னு ஒண்ணு இருக்காமே. இந்த மாதிரி கியர் எல்லாம் மாத்தும் போது வண்டி ஆப் ஆகாதாமே. உண்மையா?"
"கரெக்ட் மேடம்.
ஆட்டோ கியர் சூப்பரா இருக்கும். அதுவும் நம்ள மாதிரி லேடீஸுக்கு ரொம்பவே கரெக்டாக
இருக்கும். நீங்க கூட ஆட்டோ கியர் வாங்கியிருக்கலாமே. கொஞ்சம்தான் வெலை அதிகம். ஆனா இந்த மாதிரியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்காது!"
நான் எங்கே கார்
வாங்கினேன். ரவி கேட்டானா? இல்ல அப்பாதான்
என்னைக் கேட்டாரா? அவருக்கும் இந்த
விஷயம் தெரிஞ்ச்சுருக்குமே. அதுவும் 'சேப்பாயி' மாதிரி இப்படி ஒரு கலர். நான்
வாங்கியிருந்தால் சூப்பரா கருப்புக் கலர்லே வாங்கியிருந்திருப்பேனே!
என் பெயர் விஸ்மயா - 2 - (குறு நாவல்)
அனந்துவுக்குப் புதுமையாக
ஏதாவது பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும். இப்போது என்ன யோசனையென்றால் 10ஆம் தேதி வருகின்ற தன்னுடைய பிறந்தநாளுக்கு எதுவும்
வாங்கிக் கொள்ளாமல், வீட்டில் உள்ள
எல்லோருக்கும் ஏதாவது வித்தியாசமாக வாங்கிக் கொடுத்தால் என்ன?
வசுமதிக்கு ஒரு பெங்கால்
காட்டன் புடவை. ரவிக்கு ஒரு கிரிக்கெட் பேட். பாவம் ரொம்ப நாளா ஒரு சொத்த பேட்தான்
வைத்துக் கொண்டிருக்கிறான். அப்பாவுக்கு ராசியிலே ஒரு ஜிப்பா. அமாவுக்கு ஒரு
ரங்காச்சாரி புடவை. விஸ்மயாவுக்கு என்ன ட்ரெஸ்? நோ...நோ... இந்த முறை ட்ரெஸ் வெண்டாம். வித்தியாசமா ஏதாவது! ...கேமிரா?.... இல்ல ... இல்ல...
ஹவ் அபௌட் எ மொபைல் போன்?
ஆபீசிலிருந்து கண்ணனை ஒரு
கிரிக்கெட் பேட் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி விட்டான் அனந்து. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ராசியில் ஜிப்பாவும், அம்மாவுக்கு ரங்காச்சாரியிலே புடவையும் நொடியில் வாங்கி முடித்தான். விஸ்மயாவுக்கு
மொபைல் போன் வாங்க வெண்டும். எங்கு வாங்குவது? எப்படி வாங்குவது தெரியவில்லை. டி.வி ‘ஆட்’டில் வருமே
அப்படி கைக்கு அடக்கமாக, குட்டியூண்டு... அந்த விளம்பரம் எடுத்தவன் ரொம்பக் கிரியேட்டிவிட்டி உள்ள
ஆள்தான். அந்த வயசாளி டேபிளில் அமந்திருக்கும் பெண் தன்னைத் தான் கூப்பிடுவதாக
எண்ணி கடைசியில் பஜ்ஜி ஆவாரே! அது சூப்பர் விளம்பரம்தான். ஆனால் ப்ரொடக்ட்?.... வசதியாக இருக்குமா? க்கு அடக்கமா இருக்கு.
ஆனால் காதில் வைத்தால் ஒழுங்காகக் கேக்குமா? போன் பெரிசாக
பெரிசாகத்தான் நன்றாகக் கேட்கும். அனந்து அவராக இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்.
அன்று மாலை எக்மோர்
சென்றார். அல்ஸா மாலில் கேசட் ப்ளேயர், டால்கம் பவுடர், சோப்பு, கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற
வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் ஒரே கடை அந்தக் கடை. கால்குலேட்டர் சைஸில் இருந்த
அந்த வெள்ளைக் கலர் மொபைல் போன் அவரைக் கவர்ந்தது.
"ஆஹா! இதில்தான்
பட்டன்கள் எவ்வளவு பெரிசு, பெரிசா இருக்கு. வெய்ட் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் நெறைய நாள் உழைக்கும் போலத்
தெரிகிறது. ஒரு பத்து நிமிட யோசனைக்குப் பிறகு, அந்தப் போனை எடுத்தார். கிப்ட் பேக் பண்ணச் சொன்னார். ஒரு
வழியாக எல்லோருக்கும் கிப்ட் வாங்கியாச்சு.
அந்த ஞாயிற்றுக் கிழமை
அனந்துவின் வீட்டில் தீபாவளி கோலாகலம். அப்பாவுக்குக் ஜிப்பா, அம்மாவுக்கு ரங்காச்சாரி
புடவை, வசுமதிக்கு
பெங்கால் காட்டன், ரவிக்கு கிரிக்கெட் பேட், விஸ்மயாவுக்கு மொபைல் போன்….ஒரே கிப்ட் மயம்
"அப்பா! இது ரொம்ப அநியாயம். எனக்கு மட்டும் கிரிக்கெட் பேட். விஸுவுக்கு
மட்டும் மொபைல் போனா? அது எவ்வளவு? என்னோடது எவ்வளவு?"
"ரவி! அப்பாவுக்குத்
தெரியாதடா? எனக்கே ஒரு
மொபைல் போன் கிடையாது. அப்பாவுக்குத் தெரியும். யார், யாருக்கு எப்ப என்னென்ன வாங்கித் தரணும்னு."
வசுமது ஆறுதலுக்காகச்
சொன்னாளா, இல்லை, ஆற்றாமையால் சொன்னாளா?... தெரியவில்லை.
அத்தனை பேருக்கும் மொபைல்
போன் மீது ஒரே கண். இந்த வீட்டில் அனந்து மட்டும்தான் மொபைல் போன் வைத்துக்
கொண்டிருந்தான். இப்ப என்னடானா பன்னண்டாங் க்ளாஸ் படிக்கிற பொண்ணுக்கு மொபைல்.!
"அவ கோச்சிங் க்ளாஸ்…, அது, இதுன்னு போயிட்டு
வந்துண்டிருக்கா. மொபைல் போன் ஒண்ணு இருந்தா சௌகர்யமா
இருக்கும்மேன்னுட்டுத்தான்."
"அப்பா. விசூவோட ஒரு ப்ரண்ட்ஸுகிட்டெயும் மொபைல் போன் கிடையாது.
எல்லோரும்தான் கோச்சிங் க்ளாஸ் போறாங்க. இவளுக்கு மட்டும் என்ன மொபைல் போன்?"
"ரவி, தொண, தொணன்னு
கம்ப்ளைண்ட் பண்ணாம இரு. விஸு என்ன இருந்தாலும் நம்ம வீட்டுக்குக்
கடைக்குட்டிதானே! அவளுக்கு இல்லாத கிப்டா என்ன?
மறு நாள் மொபைல் போனுடன் பெருமையாகச் ஸ்கூலுக்குச் சென்றாள் விஸ்மயா. கிளாஸ்
முடியும் போது அப்பா கால் பண்ணினால் நன்றாக இருக்குமே! ப்ரண்ட்ஸ் முன்னால் மொபைல்
போனை எடுத்து பேசலாமே! நினைத்த மறு நிமிடம் கால் வந்தது.
மொபைல் போனை எடுத்துப்
பந்தாவாகப் பேசினாள் விஸ்மயா. ப்ரண்ட்ஸ் எல்லோரும் பொறாமையாகப் பார்த்தனர்.
"என்னடி இது மொபைல்
போன்? சொல்லவேயில்லை!"
"புதுசுடி. எங்கப்பா
தன்னோட பர்த்டேக்கு எனக்குப் பிரசன்ட் பண்ணினது."
"அது சரி...
எப்படிடீ கால்குலேட்டரிலெல்லாம் போன் பேச முடியுது?"
" ஏய்.. என்ன சொல்றே?"
"ஆமாண்டி. உன்னோட
மொபைல் போனைப் பாத்தா கால்குலேட்டர் மாதிரி இருக்கு. உண்மையாவே சொல்லு! இது மொபைல்
போன் தானா?"
"ஏய், என்ன வெளயாடறியா? இது நிஜ மொபைல்
போன் தான்."
"ச்சீ. மொபைல்
போன்னா, உள்ளங்கைக்குள்ள அடங்கற மாதிரி இருக்க
வேண்டாம். அந்த டி.வி ‘ஆட்’லே வர்ற மாதிரி."
"ஆமாம். வித்யா
சொல்றதும் கரெக்ட்தான். அந்த மாதிரி குட்டியூண்டு, க்யுட்டாத்தானே மொபைல் போன் வேணும்னு ஆசைப்பட்டேன். அப்பா ஏன் எங்கிட்டே ஒரு
வார்த்தை கூடக் கேக்கலை. கடைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு
வார்த்தை எந்த மாடல் போன் வேணும்னு கேட்டிருக்கலாமே!"
என் பெயர் விஸ்மயா - 3
என் பெயர் விஸ்மயா - 4
என் பெயர் விஸ்மயா - 3
என் பெயர் விஸ்மயா - 4