Wednesday, February 22, 2006

அரசு ஆவணம்-1846

1. சந்த்ரமா, பாங்க், டிளா பட்டியைக் கட்டக் கூடாது.
2. புடவை, ஸாடி, பந்தளம் இவைகளுக்குக் கூட முந்தாணிக்கு ஜாலர் தைக்கக் கூடாது.
3. குசூம்பா நாடா போடக் கூடாது.
4. நாடாவுக்கு துய்யா தைக்கக் கூடாது.
5. மக்தாபீ ரவிக்கை போட்டுக் கொள்ளக் கூடாது.
6. பூ ராக்கடிக்கு பஞ்ஜ்யாவையும் களைகளையும் போட்டுக் கொள்ளக் கூடாது.
7. க்ருஷ்ண கொண்டை, முத்துவின் கொத்தைப் போடக் கூடாது.
8. சடையின் நுனியில் தங்கத்தில் குஞ்சத்தைத் தவிர பட்டுக்குஞ்சலத்தைப் போடக் கூடாது.
9. புத்தியை வாங்கக் கூடாது.
10. துப்பட்டாவைப் புழங்கக் கூடாது.
11. தாண்டாவிற்கு எலுமிச்சம்பழம் போடக் கூடாது.
12. குங்குமம் நெற்றியின் குறுக்கே தடவிக் கொள்ளக் கூடாது.

ஜபாணி குப்பண்ணா ஜாதவ்.

அரசு ஆவணம்-1846

1846 ஆம் ஆண்டு அரசு வெளியிடப்பட்ட மேற்க்காணும் ஆவணம் ஒன்றில், தேவதாசிகள் எவ்விதம் நடக்க வேண்டுமென விளக்குகின்றது.

ஆதாரம்

மரபு தந்த மாணிக்கங்கள்
தஞ்சாவூர் பி.எம். சுந்தரம்
டாக்டர் வே.ராகவன் நிகழ் கலை மையம்
சென்னை - 20

படித்தால் சிரிப்பு வரவழைக்கும் இந்த ஆவணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்த பட்சம், இதில் உள்ள தமிழ்(?) வார்த்தைகளுக்காவது யாரேனும் பொருள் கூற முடியுமா?

3 comments:

  1. மரத்தடியில் வந்த ஒரு மறுமொழி
    ------------------------------

    அவங்க என்னென்ன போடணம், போடக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது போல இருக்கு. கொஞ்சம் guess பண்ணலாம் தான். எதாவது வில்லங்கமா இருக்குமான்னு பயமா இருக்கு. நான் எதானும் சொல்லி, அது வேற எதானும் இருந்துட்டா ரொம்ப கஷ்டமாப் போயிடும்.

    1. க்ருஷ்ண கொண்டை பொட்ட, அதுல முத்து தொங்கக்கூடாது போல

    2. அது என்ன குசும்பா நாடா? ஒருவேளை குசும்பா "நடை" போடக் கூடாது என்று இருக்குமா?

    3. மக்தாபீ என்பது ஒரு வித ·பேஷன் ஆக இருக்கலாம்/ஒரு வித துணிவகையாய் இருக்கலாம்/ அல்லது மக்தாபீ எனும் ஊரில் போடப்படும் ரவிக்கையாக இருக்கலாம். இக்காலத்தில் புழங்கும், பிண்டெக்ஸ், கலம்கரி, போல.... அந்த மாதிரி மக்தாபீ ரவிக்கை போடக் கூடாதுன்னு சொல்லி
    ருப்பாங்க.

    4. நாடாவுக்கு துய்யா? ஏதானும் குஞ்சலம் மாதிரி இருக்குமோ?
    நாடாவுக்கு குஞ்சலமா :)))) (ஷைலஜா....துணைக்கு வாங்க. தனியா பேச பயமா இருக்கு :)))...)

    5. சந்த்ரமா(இது ஹிந்தி வார்த்தை என்பது மட்டும் புரியுது),
    பாங்க், டிளா type of பட்டி கட்ட கூடாதாம்

    6. புடவை, ஸாடி(ஸாடி என்றால் புடவை தான்), பந்தளம் (half saree? ஹஹஹ்)
    அதுக்கெல்லாம் கூட ஜாலர் தைத்த முந்தாணி இருக்கக் கூடாதாம்.

    7. சடை நுனியில் தங்கக் குஞ்சலம் தான் போல. (மற்ற பெண்களுக்கும், தேவதாசிகளுக்கும், வித்தியாசம் சொல்ல இது போல் செய்திருக்கலாம்..
    மற்ற பெண்கள் பட்டுக் குஞ்சலம் கட்டுவார்களோ என்னவோ!)

    8. புத்தியை வாங்கக் கூடாதாம்......(ஒரு வேளை யாருமே குடுக்கற அளவு ஸ்டாக் வெச்சுகலையோ???)

    9. குங்குமத்தை ரவுண்டாக பொட்டு போலத் தான் வைக்கணம்.
    குறுக்கால விபூதி மாதிரி வெக்க கூடாதாம்.

    10. பூ ராக்கொடி, பஞ்சய்யா, களைகளையெல்லாம் போடக் கூடாது.
    (சாதாரண பெண்கள் போட்டுக்கொள்வதாய் இருக்கும்!) May be a type of jewellery.

    அன்புடன்,
    ஷக்திப்ரபா

    ReplyDelete
  2. மரத்தடியில் வந்த மற்றுமொரு
    --------------------------
    மறுமொழி
    ---------

    1. க்ருஷ்ண கொண்டை பொட்ட, அதுல முத்து தொங்கக்கூடாது போல க்ருஷ்ணர் கொண்டை என்றால் மயிலிறகுதான் இருக்கணும் போல!

    2. அது என்ன குசும்பா நாடா? ஒருவேளை குசும்பா "நடை" போடக் கூடாது என்று இருக்குமா?
    இது அப்படி இருக்காது ஆனால் புரியவில்லை எனக்கும்

    3. மக்தாபீ என்பது ஒரு வித ·பேஷன் ஆக இருக்கலாம்/ஒரு வித அந்த மாதிரி மக்தாபீ ரவிக்கை போடக் கூடாதுன்னு சொல்லிருப்பாங்க.

    எனக்கென்னவோ மக்தாபீ என்பது ஒருவகைப்பெண்களாயிருக்கணும் அவங்க நம்ம ஊர்ல சில கிராமங்களீல் ரவிக்கை போடாத பெண்மணீகள் போல இருக்கு

    4. நாடாவுக்கு துய்யா? ஏதானும் குஞ்சலம் மாதிரி இருக்குமோ?
    நாடாவுக்கு குஞ்சலமா :)))) (ஷைலஜா....துணைக்கு வாங்க. தனியா பேச பயமா
    > இருக்கு :)))...)

    வந்தேன் ஷக்தி..எனக்கும் ஒண்ணூம் சரியா புரியல..துய்யா என்பது கன்னட லங்கா வா இருக்குமோ?

    5. சந்த்ரமா(இது ஹிந்தி வார்த்தை என்பது மட்டும் புரியுது),
    பாங்க், டிளா type of பட்டி கட்ட கூடாதாம்

    சந்த்ரமா..நிலவு..டிளா என்ன கவுனா?

    6. புடவை, ஸாடி(ஸாடி என்றால் புடவை தான்), பந்தளம் (half saree? ஹஹஹ்)
    அதுக்கெல்லாம் கூட ஜாலர் தைத்த முந்தாணி இருக்கக் கூடாதாம்.

    ஜாலர் என்றால் ·ப்ரில்..அதாவது புடவை தாவணிக்கெல்லாம் ஓரங்களில் ப்ரில் வச்சிருக்காம சிம்பிளா இருக்கணும்போல்ருக்கு

    7. மற்ற பெண்கள் பட்டுக் குஞ்சலம் கட்டுவார்களோ என்னவோ!)

    அப்படித்தான் இருக்கும்

    8. புத்தியை வாங்கக் கூடாதாம்......(ஒரு வேளை யாருமே குடுக்கற அளவு ஸ்டாக் வெச்சுகலையோ???)

    புத்தி கன்னடத்துல மட்டும் பெரிவங்க என்கிறமாதிரி அர்த்தம் வரும் இங்க என்னவென்று நமது புத்திக்கு எட்டவில்லை

    9. குங்குமத்தை ரவுண்டாக பொட்டு போலத் தான் வைக்கணம்.
    குறுக்கால விபூதி மாதிரி வெக்க கூடாதாம்

    திலகம் மாதிரி நீட்டமா வச்சிக்க கூடாதுபோல இருக்கு

    10. பூ ராக்கொடி, பஞ்சய்யா, களைகளையெல்லாம் போடக் கூடாது.
    (சாதாரண பெண்கள் போட்டுக்கொள்வதாய் இருக்கும்!) May be a type of jewellery.

    ராக்கொடி தலையின் மேலே வைப்பது பஞ்சய்யா களை என்பது சந்திரபிரபை
    சூரிய பிரபை என்று தலையின் இருபக்கமும் வைப்பதோ என்னவோ?

    அன்புடன்
    ஷைலஜா

    ReplyDelete
  3. சிமுலேஷன், நல்ல ஒரு சாம்பிளைப் பிடித்திருக்கிறீர்கள்!

    ReplyDelete