இராம.கி அவர்கள் எழுதிய "புங்கம்" என்ற கட்டுரையில் சுத்திகரிப்பு ஆலை குறித்த சொல்லாடலில் எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு octane numberக்குச் சொல்லப்பட்ட "எட்டக எண்" ஆகும். மற்றவை வருமாறு:-
பாறைநெய் (petroleum)
நீர்ம எரிவளி (Liquid Petroleum Gas)
நடுவத் துளித்தெடுப்புகள் (middle distillates)
நெய்தை (naphtha)
கன்னெய் - கல்நெய் (petrol or gasoline)
மண்ணெய் (kerosene)
டீசல் - வளிநெய் (gas-oil).
துளித்தெடுத்தம் (distillation)
சூழ்அழுத்தத் துளித்தெடுப்பு (atmospheric distillation)
வெறுமத் துளித்தெடுத்தம் (vacuum distillation)
குறை அழுத்த துளித்தெத்தல் (distilled at low pressure)
பிரித்தெடுக்கும் செலுத்தங்கள் (separating processes)
வினையூக்கி மறுவாக்கம் (catalytic reforming)
பாறைநெய்ச் செலுத்தங்கள் (petroleum processes)
துளித்தெடுப்புக் கோபுரம் (distillation tower)
கொதிநிலை (boiling points)
பாய்மப் படுகை (fluidized bed)
வினையூக்கி உடைப்பு (catalytic cracking)
நீர்மம் (hydrogen)
நீர்ம உடைப்பு (hydrocracking) .
நீர்மக்கரியன்களே (hydrocarbons)
எட்டக எண் (octane number)
பிசுக்கைப் பொருள் (pitch)
கரிப்பிசுக்கு (coal-tar)
நடுவத் துளித்தெடுப்புகள்(middle distillates)
பிசுக்குமை (viscosity)
களிக்கரை (glycerol)
வெறியங்கள் (alcohol)
கொழுப்புக் காடி அத்துகள் (fatty acid esters)
பாய்மை (fluidity)
புதிரிகள் (problems)
புனைகள் (components)
செறிவைக் (concentration)
தெவிட்டுதல் (to saturate)
தெவிட்டாத காடி (unsaturated acid)
தெவிட்டாமை (unsaturation)
இரட்டைப்பிணை (double bond)
மேலும் அறிய...
(http://valavu.blogspot.com/2006/03/blog-post_114137405073613188.html)
ராம்கி, மிக நல்ல மொழிபெயர்ப்பு. அப்படியே இந்த ஐட்டங்களுக்கும் கொஞ்சம் ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லிடங்க:
ReplyDeleteDCS (Distributed Control system)
PLC (Programmable Logic controller)
ESD (Emergency Shutdown System)
APC (Advanced Process Control)
Anti-surge Controller
சமலாற்ற (simulation) நண்பரே!
ReplyDelete[ஒன்றிற்குச் சமலாக இன்னொன்றை ஆற்றுவது சமலாற்றம். சமல் = simile; சம்முதல் என்ற வினையில் தொடங்கியது. இன்றையப் பதிவான சமயம் -1 என்பதையும், அதன் தொடர்பான அடுத்து வருவனவற்றையும் படியுங்கள்.]
மேலே செறிவு என்பதை "செறிவைக்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். "செறிவைக்" என்று கட்டுரையில் வாக்கிய அமைப்பு கருதி வந்திருக்கிறது.
பெயர்ச்சொல் செறிவு; வினைச்சொல் செறிதல்.
திரு.கால்கரிசிவா!
நீங்கள் குறித்த கட்டுறல் (control) சொற்களைக் குறித்துக் கொண்டேன். பின்னொரு நாள் சொல்ல முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
சிவா அவர்களே.. நான் முயற்சி செய்துள்ளேன். இராம.கி அவர்கள் சரியாவென்று சொல்லட்டும்.
ReplyDeleteDCS (Distributed Control system) - பரவலாக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கட்டகம்
PLC (Programmable Logic controller) - கட்டமைக்கப்பட்ட ஏரண கட்டுறுத்தி
ESD (Emergency Shutdown System) - அவசரநிலை மூடல் கட்டகம்
APC (Advanced Process Control) - முன்னேறிய செயலாக்கக் கட்டுப்பாடு
Anti-surge Controller - தடு-பொங்கிக் கட்டுறுத்தி
சிமுலேஷன் அவர்களே, மிக நல்ல மொழிப் பெயர்ப்புகள். சிறு திருத்தங்கள்
ReplyDeletePlC : கட்டுமைக்ககூடிய எரணக் கட்டுறுத்தி
APC = அதிநவீன செயலாக்கக் கட்டுப்பாடு
அன்புள்ள அய்யா
ReplyDeleteநீர்மம் என்பது liquid என்பதற்கு தமிழாக்கம்
நீரியம், நீரசம் ஆகியவை Hydrogen என்பதற்கு தமிழாக்கமாகும்
நன்றி
சிவா
TAMIL CHEMISTRY GLOSSARY
ReplyDeleteதமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்
http://www.geocities.com/tamildictionary/chemistry/
TAMIL NAMES OF MAJOR CHEMICAL
வேதிப்பொருட்களின் தமிழ் பெயர்கள்
TAMIL CHEMISTRY GLOSSARY
ReplyDeleteதமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்
http://www.geocities.com/tamildictionary/chemistry/
TAMIL NAMES OF MAJOR CHEMICAL
வேதிப்பொருட்களின் தமிழ் பெயர்கள்
TAMIL CHEMISTRY GLOSSARY
ReplyDeleteதமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்
http://www.geocities.com/tamildictionary/chemistry/
TAMIL NAMES OF MAJOR CHEMICAL
வேதிப்பொருட்களின் தமிழ் பெயர்கள்