Thursday, August 24, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி



கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்ய¡ணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே இராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். பாடற் பட்டியலுக்குப் பே¡கு முன்பு சின்ன விளக்கங்கள்.

இராகம்: கல்யாணி65ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை): ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை): ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

கர்னாடக இசையிலே ஸப்தஸ்வரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்களின் permutation and combinationகளில் கிடைப்பது 72 தாய் இராகங்களாகும். இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயருமுண்டு. இந்த 72 இராகங்களையும் மேலும், மேலும் கலக்கக் கிடைப்பது, ஆயிரக்கணக்கான ஜன்ய(சேய்) இராகங்களாகும். 72 மேளகர்த்தா இராகங்களும் ஒரு வரிசைப்படி அ¨மந்துள்ளன. இந்த அமைப்பு ஒரு சக்கரம் போல அமைந்திருப்பது, அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கும். இந்தத் தொடரிலே, அப்படி இப்படி இந்த சமாச்சாரங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து விடலாம் என்றுதான் இருக்கின்றேன்.

இந்த மேளகர்த்தா இராகங்களின் துவக்கப் பெயரைக் கொண்டு, அவற்றின் வரிசை எண் என்னவென்று கூற முடியும். வெங்கடமகி என்பவர், இந்த வரிசை எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதற்காக 'கடபயாதி என்ற சூத்திரம் ஒன்றினை வடித்துள்ளார். இந்த சூத்திரத்தினைப் பயன்படுத்துவதற்காக, சில இராகங்களுக்கு மட்டும் சிற்சில பெயர் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி கல்யாணியை, 'மேச' என்ற prefix சேர்த்து, மேசகல்யாணி என்றழைத்தார். மற்றபடி நேமாலஜி/நியூமராலஜி சமாச்சாரம் ஏதும் இதில் கிடையாது. இப்போது மேளகர்த்தா சக்கரத்தைப் பற்றியும், "கடபயாதி" சூத்திரத்தினைப் பற்றியும் §மலும் அறுக்காமல், பின்னாளில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது. இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. ஆதாரம் உன்றன் திவ்ய பாதமே - பக்த கௌரி
02. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
03. ஆடும் அருள் ஜோதி - மீண்ட சொர்க்கம்
04. ஆழ் கடலில் முத்தெடுத்து - ராகம் தேடும் பல்லவி
05. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் *
06. ஆராரோ ஆராரோ - ஆனந்த்
07. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
08. சரணம் பவ கருணாமயி - சேது
09. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் *
10. என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
11. இகலோகமே - தங்கமலை ரகசியம்
12. இளவட்டம் கேட்கட்டும் - மை டியர் மார்த்தாண்டன்
13. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன் *
14. இசையமுதம் - கோடீஸ்வரன்
15. ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை *
16. கலை வாணியே - சிந்து பைரவி *
17. கனவிலும் உனை மறவேன் நான் - மச்சரேகை
18. கண்ணாலே காதல் கவிதை சொன்னானே - ஆத்மா
19. கண்ணன் வந்தான் - ராமு *
20. காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார் *
21. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு *
22. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
23. கொக்கு சைவக் கொக்கு - முத்து
24. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
25. மனதில் ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
26. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் - அஷோக் குமார்
27. மஞ்சள் வெயில் - நண்டு *
28. மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி
29. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர் *
30. முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப் பதுமை *
31. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் *
32. நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
33. நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
34. நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள்
35. நானே உன் அடிமையே - மண மகள்
36. நீது சரணமுலே - சேவாசதனம்
37. நினைக்கின்ற பாதையில் அணைக்கின்ற - ஆத்மா
38. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
39. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம் *
40. பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - பெண்
41. புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது
42. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்
43. சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் - இது நம்ம ஆளு *
44. செண்பகவல்லி உன்னைச் சேவித்தேன் - காசினி வேண்டினி
45. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி *
46. சிங்கநடை போட்டு - படையப்பா
47. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
48. சுந்தரேஸ்வரனே சுபகராக்ருபா - கன்னிகா
49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி *
50. சுத்திச் சுத்தி - படையப்பா
51. தாலாட்டும் காற்றே - தேவன்
52. தானே தனக்குள் - பேரும் புகழும் *
53. தாயைப் பணிவேன் - ஜகதலப்ரதாபன்
54. தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
55. தேன் சிந்துதே வானம் - சொல்லத்தான் நினைக்கிறேன் *
56. திருவளர் உருவே போற்றி - பக்த துளசிதாஸ்
57. துணிந்த பின் மனமே - தேவதாஸ் *
58. உள்ளம் ரெண்டும் - தூரத்து இடி முழக்கம்
59. உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
60. உப்புக் கருவாடு - முதல்வன்
61. வா காத்திருக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
62. வைதேகி ராமன் - பகல் நிலவு
63. வான் பொய்த்தாலும் தான் பொய்யா - ஆடிப் பெருக்கு
64. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம் *
65. வாசமல்லிப் பூவு - செவ்வந்தி
66. வீணையடி நீ எனக்கு - ஏழாவது மனிதன்
67. வெள்ளை புறா ஒன்று - புதுக் கவிதை *
68. விழிகள் மீனோ மொழிகள் தேனோ - ராகங்கள் மாறுவதில்லை
69. யாரறிவான் இறைவன் திருவருள் - ஞான சௌந்தரி

இவ்வளவு பெரிய பட்டியலில், ஒரு சில பாடல்களில்* மட்டும், கல்யாணி இராகத்தினை, 'டபக்'கென்று கண்டுபிடிக்க முடிகின்றது. மற்ற சில பாடல்களில் முடிவதில்லையே! காரணம் என்னவென்றால், இந்த இசையமப்பாளர்கள், பாரம்பரிய இசைவாணர்கள் போலல்லாமல், தமது பாடல்களில் சில அன்னிய ஸ்வரங்களையும், 'சாப்பிடு', என்று சேர்த்து விடுவதுதான். எனவேதான் அவை 100% ஒரே இராகத்தில் இல்லாமல் இருந்து, இராகம் கண்டுபிடிக்கச் சில சமயம் படுத்துகின்றன.

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு இலக்கணம் மிக முக்கியம். ஆனால் திரையிசை இயக்குநர்களுக்கோ, மனமகிழ்வு ஏற்படுத்துதல் மட்டுமே முக்கியம். வலைப்பதிவர்கள் போல, அவர்களுக்கு யார் கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி, விருப்பப்பட்ட இராகங்களுக்கு, வேண்டுமென்றபோது, 'வித்தவுட்டில்' போய்விட்டு, பல்லவியில் சமர்த்தாக ஆரம்பித்த இராகத்திலேயே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

முன்னமே கூறியது போல, இந்தப் பட்டியலில், கல்யாணி இராகம் எந்தெந்தப் பாடல்களிலெல்லாம், பிரதானமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ, அந்தப் பாடல்களை மட்டும் ஒருங்கே பதிவு செய்து, பத்து முறை கேட்டுப் பாருங்கள். அதன் பின், தப்பித் தவறி விபரீத ஆசை ஏற்பட்டு, ஏதெனும் ஒரு கச்சேரிக்குப் போய், பாடகர் 'நிதிசால சுகமா' அல்லது, 'பங்கஜ லோசனா' என்று பாட ஆரம்பித்தவுடன், "ஆபோகிதானே இது?" என்று அப்பாவியாய்க் கேட்கும் என்று பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணியாக்கம் இது", என்று அசத்தத் தோன்றும்.

- சிமுலேஷன்.

24 comments:

  1. அருமையான பதிவு சிமுலேசன்..

    ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

    இதில் 2 3எனும் எண்கள் எதைக் குறிக்கும்.

    வெஸ்ட்டர்ன்ல வரும் ஷார்ப் ஃப்ளாட் மாதிரியா இது?

    ReplyDelete
  2. Thanks for your posting
    Really you are doing a wonderful service to the music lovers.
    May god bless you for all the good in your life
    Music itself is devine

    ReplyDelete
  3. இனிய சிமிலேஷன் அய்யா,

    நன்றிகள்.

    1/3:
    அகத்தியரில், '*நாட்டை*யும் நாதத்தால் வென்றிடுவேன்' பாடலில், 'கல்யாணி மணாளன் கைகொடுப்பான்' வரிகளும் கல்யாணிதானா?

    2/3:
    'கற்பகவல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன்' பாடலில், 'கல்யாணியே கபாலி காதல் புரியுமந்த __யே' வரிகளும் கல்யாணிதானா?

    3/3:
    பாடல் எண் 55ஆக நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்,

    'தேன் சிந்துதே வானம்
    உனை எனை தாலாட்டுதே
    மேகங்களே தரும் ராகங்களே
    எந்நாளும் வாழ்க!' - இதுதானா?

    இதுதான் என்றால் இடம்பெற்ற திரைப்படம்: தேன் சிந்துதே வானம் - இசை: வி.குமார் என்றே நினைக்கிறேன்.

    உங்கள் தொடரைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறேன்.

    அன்புடன்
    ஆசாத்

    ReplyDelete
  4. //என்று பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணியாக்கம் இது", என்று அசத்தத் தோன்றும்.
    //

    அசத்துவதற்காகவே ஒரு கச்சேரி போகவேண்டும்.

    மிக நல்ல பதிவு சார்.

    தியாகராசர் கீர்த்தனைகளுக்கு தமிழ் அர்த்தங்களையும் தந்தால் தன்யன் ஆவேன்

    ReplyDelete
  5. சிமுலேஷன்,

    நீங்கள் சொல்வதின் படி இங்கு கல்யாணி, வடநாட்டில் யமனாக இருப்பதாகத் தெரிகிறது. பின் யமன் கல்யாணி எனச் சொல்கிறார்களே, அது வேறு ராகமா? கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  6. அவ்வளவு நுனுக்கமாக அனுபவிக்காவிடாலும் இந்த கல்யாணி ராகம் அப்படியே ஆளை எங்கோ கொண்டுபோவதென்னவோ உண்மை.

    ReplyDelete
  7. அத்தனை சுரங்களும் ஆரோகணம் அவரோகணத்தில் இருந்தால் அது ஒரு சம்பூர்ண ராகம் என்று விவித பாரதியின் "சங்கீத் சரிதா" என்ற தினம் வரும் நிகழ்ச்சியில் கேட்டிருக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. மிக நல்ல பதிவு. சிற்றிசை மூலம் பேரிசைக்கு மக்களை கொண்டுவர நல்ல வழி.இதில் மன்னவன் வந்தானடியில் கல்யாணி இப்போதுள்ள காவேரி போல் ப்ரவகமாக பெருக்கெடுத்து ஒடுகிறாள்.

    ReplyDelete
  9. ithu simulation padaipukal alla
    STIMULATION padaipukal TRC

    ReplyDelete
  10. சிறில்,

    கிட்டத்தட்ட அது மாதிரிதான். மற்றொரு தனிப் பதிவில் பிறகு விளக்குகின்றேன்.

    சுப்பையா அவர்களே,

    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ஆசாத்,
    1/3, 2/3 புரிதல்கள் சரியே. 'தேன் சிந்துதே வானம்' பாடல், நீங்கள் சொன்னபடி அதே தலைப்பிட்ட படத்தில் வந்துள்ளது சரிதான் என்றும் நான் குறிப்பிட்டுள்ள படம் தவறுதான் என்றும் சொல்லத்தான் நிணக்கிறேன்.

    சிவா,

    அசத்திய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தியாகராசர் கீர்த்தனைகளுக்கு தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்ள, டி.எஸ்.பார்த்த சாரதி அவர்கள் எழுதி The Karnatic Music Book Centre, Chennai பதிப்பித்த "ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்" என்ற தமிழ்ப் புத்தகம் உதவும். மேற்படி புத்தகத்தினை அவர்களது இணைய தளம் மூலம் பெற முடியும்.

    இலவசக் கொத்தனார்,

    யமனும், யமன் கல்யாணியும் ஒன்று போலத் தோன்றினும் வெவ்வேறே.

    கல்யாணி
    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ
    அவரோகணம்: ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

    யமன் கல்யாணி
    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த2 நி2 த2 ஸ
    அவரோகணம்: ஸ த2 ப ம2 க3 ரி2 ஸ

    வடுவூர் குமார்,

    வருகைக்கு நன்றி

    டோண்டு அவர்களே,

    தகவலுக்கு நன்றி. 'சம்பூர்ண இராகம்', 'சாடவ இராகம்;, 'அவுடவ இராகம்', போன்றவற்றை பிரிதொரு பதிவில் விளக்குகின்றேன்.

    தி.ரா.ச அவர்களே,

    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  11. அருமையான பதிவு நண்பரே இப்படியே ராகங்களில் ஒரு ஆராய்ட்சி செய்து எழுதுங்கள். ஏனைய ராகங்கள் பற்றியும் எழுதுங்கள். குறிப்பாக நம்ம இசை ஞானி கையாண்ட ராகங்களை இன்னொரு பதிவில் விபரித்து எழுதுங்கள்

    ReplyDelete
  12. மிக மிக நல்ல பதிவு , நன்றிகள் பல.
    யமன் கல்யாணியில் "க்ருஷ்ணா நீ பேகனே" எம்.எல்.வி பாடிக் கேட்டபோது இலவசக் கொத்தனார் கேட்ட கேள்வி என் சிற்றறிவுக்கும் வந்தது..
    ராகங்களின் வரிசைக்கிரமம் பற்றி சிறிது விளக்கிவிட்டு மேலும் போனீர்களென்றால் என்போன்றோர்களுக்கு புரிந்துகொள்ள உதவும்.
    மேலும் தொடருங்கள்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  13. சிமுலேசன்,
    நல்ல பதிவு. நான் கர்நாடக சங்கீதம் கற்றவனல்ல. ஆனால் கர்நாடக இசையில் வரும் தமிழ்ப்பாடல்களைக் கேட்டு இரசிப்பவன். தொடருங்கள். நல்ல பதிவு.

    ReplyDelete
  14. சரியான பதிவுக்கு சரியான சுட்டியைத் தான் தந்துள்ளீர்கள்! :)

    பிரதீப்

    ReplyDelete
  15. மிக்க நன்றி!
    திரு. பார்த்த சாரதி அவர்களின் இணயத்தள முகவரியைத் தரவும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  16. தமிழன்,

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ஸ்ரீமங்கை (எ) சுதாகர்,

    நீங்கள் கேட்ட ராகங்களின் வரிசைக்கிரமம் பற்றி பற்றி பின்னொரு பதிவில் விளக்குவேன்.

    வெற்றி,

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. இந்தப் பதிவே, சங்கீதம் பற்றி குறுகிய அறிவு கொண்ட ஆர்வலர்களுக்கே.

    பிரதீப்,

    நன்றி.

    யோகன்,

    திரு. பார்த்த சாரதி அவர்களின் இணயத்தள முகவரி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு இந்தப் புத்தகம் வேண்டுமென்றால் தொடர வேண்டிய இணைய தளம்.

    http://www.carnaticbooks.com/

    விரைவில் வெளிவருகிறது.

    "தமிழ்த் திரையிசையில் இராகங்கள்-03 - கீரவாணி"

    - சிமுலேஷன்

    ReplyDelete
  17. சிமுலேசன்,

    சிறந்த பதிவு. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்.

    உங்கள் பதிவிலுள்ள பாடல்களைத் தொகுத்து சில வலையொலிகள் www.tamilpodcaster.com என்ற வலையொலி தளத்தில் வெளியிடலாமென்று இருக்கிறேன். உங்களுக்கு அதில் ஆட்சேபனை இருக்கிறதா?

    நன்றி

    ReplyDelete
  18. ஊமை,

    ஒலியேற்றுங்கள். ஆட்சேபணை ஏதுமில்லை. வாழ்த்துக்கள்.

    -சிமுலேஷன்

    ReplyDelete
  19. www.tamilpodcaster.com தளத்தில் பாடல்களை எவ்வாறு ஏற்றுவதென வல்லுனர்கள் அறிவுறுத்துக.

    ReplyDelete
  20. ஞானி அய்யா,

    உங்கள் கேள்வி தொடர்பாக உங்களுக்கு தனி மடல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  21. "உங்கள் பதிவிலுள்ள பாடல்களைத் தொகுத்து சில வலையொலிகள் www.tamilpodcaster.com என்ற வலையொலி தளத்தில் வெளியிடலாமென்று இருக்கிறேன். உங்களுக்கு அதில் ஆட்சேபனை இருக்கிறதா?"

    - ஊமை

    ஒலியேற்றியுள்ளீர்கள் என்று நம்புகின்றேன். அவற்றை எப்படிக் கேட்பது என்று விளக்க முடியுமா?

    - சிமுலேஷன்

    ReplyDelete
  22. http://www.tamilpodcaster.com/blog/?p=22

    ஊமை அவர்கள் பல கல்யாணி இராகப் பாடல்களை ஒலியேற்றியுள்ளார், மேற்காணும் தளத்தில். கேட்டு மகிழுங்கள்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  23. ஜெயாடி.வி.யில் தற்போது, ராஜேஷ் வைத்யா அவர்கள் 'நாத மாலை' என்ற நிகழிச்சியில், தனது வீணை இசையில் 'கல்யாணி' இராகப் பாடல்களை வாசித்து மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்.

    இதற்கு முன்னர் வாசித்தது கீரவாணி.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  24. rrsrini@gmail.com

    chil allava chil allava ithu kadhal vaagaraa (yen swasa katre) ithuvum kalyani ragam than.

    ReplyDelete