Saturday, September 23, 2006

புகைப்படப் புதிர்-02

அடுத்த புகைப்படப் புதிருக்குத் த்யாராக இருப்பீர்களென்று நினைக்கின்றேன்.

01. ஒரு பிரபலத்தை மணந்த இந்தப் பிரபலம் யார்?



02. கருப்புக் கண்ணாடி சகிதம் கலக்கும் இவர் யார்?


03. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் இடையில் நிற்பவர் யார்? அவ்ருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?



04.இந்த இரண்டு பிரபல்ங்களுக்ளிடையே இருந்த உறவு முறை என்ன?

05. ஆல்த்தூர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்களின் பெயர் தெரியுமா? பெயர் தெரியாதென்றால் இவர்களில் அண்ணா யார்? தம்பி யார்? (வலதா? இடதா?

12 comments:

  1. எங்க தாத்தா காலத்துப் படங்களையெல்லாம் போட்டு வதைக்கிறீங்களே தலைவரே!

    கொஞசம் 1955க்கு அப்புறம் உள்ள படாமாப் போடுங்க!

    ReplyDelete
  2. 1 sg kittappa - kbsundarambal
    2 MKT
    3 lakshmikanthan??? (ennanga rombave confuse panreenga simulation :-)
    4 Papanasam Sivan - SD Subbulakshmi
    5 Srinivasa Iyer - Subbaiyer

    ReplyDelete
  3. 03. வி.எல். எத்திராஜ் என்னும் பிரசித்தி பெற்ற அட்வகேட். அவர்தான் இந்த இருவரின் சார்பாகவும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆஜரானவர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. 04. பாபனாசம் சிவன், எஸ்.டி. சுப்பலட்சுமி. முன்னவர் சம்பு சாஸ்திரியாகவும், பின்னவர் அவர் மகள் சாவித்திரியாகவும் கல்கியின் தியாக பூமி படத்தில் நடித்தார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. "எங்க தாத்தா காலத்துப் படங்களையெல்லாம் போட்டு வதைக்கிறீங்களே தலைவரே!
    கொஞசம் 1955க்கு அப்புறம் உள்ள படாமாப் போடுங்க!"

    வாத்யாரே, சுளுவா கேள்வி கேட்டால், நூத்துக்கு நூறு வாங்கிவிடலாமென்று பார்க்கிறீரோ? நீங்களும் கொஞ்சம் கஷ்டப்படுங்களேன்.

    ReplyDelete
  6. ரவி ஷங்கர்,

    1. முதல் விடையைத் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். படத்திலுள்ளது கிட்டப்பா. அவர் மணந்த்து கொண்டது சுந்தராம்பாள். ஏனென்றால், படத்துலிள்ளது ஆணா, பெண்ணா என்றே சிலருக்குத் தெரியவில்லை. கிட்டப்பாவை ஒருவர் அன்னி பெசண்ட் அம்மையார் என்றிருக்கிறார். கொடுமை!

    02. பட்த்திலுள்ளது எம்.கே.டி தான். சரியான் விடை. என்ன திரப்படம் என்று சொல்ல முடியுமா?

    03. கிட்ட வந்து விட்டீர்கள்

    04. பாதி விடை சரி.

    05. பெயர் சர். யார் அண்ணா? யார் தம்பி?

    ReplyDelete
  7. 03. சரியான விடை டோண்டு அவர்களே. அவர்தான் சென்னையில் புகழ்பெற்ற எத்திராஜ் கல்லூரியின் ஸ்தாபகர்.

    04. நாலாம் கேள்விக்கான உங்கள் விடை தவறு.

    ReplyDelete
  8. எலிவால் ராஜா,

    எஸ்.ஜி. கிட்டப்பாவை பால் மாற்றி, வெளிநாட்டுப் பெண்மணியாக்கிவிட்டீர்களே.

    ReplyDelete
  9. சதயம்,

    பெயர் சரி. அது தமிழ்த் தியாகையர் எனப்படும் பாபநாசம் சிவன் அவர்களும், முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களும்தான். அவர்களுக்கிடையே என்ன உறவு முறை?

    ReplyDelete
  10. தவறான விடை சதயம் அவர்களே.

    ReplyDelete
  11. 1.எஸ்.ஜி.கிட்டப்பா
    2.எம்.கே.தியாகராஜ பாகவதர்
    "புது வாழ்வு"
    3.பாரிஸ்டர் எத்திராஜ்
    4.பாபநாசம் சிவன் அண்ணன் மகள்
    வி.என்.ஜானகி
    5. வலது

    ReplyDelete
  12. சிவஞானம்ஜி அவர்களே,

    முதல் மூன்று கேள்விகளுக்கு விடைகள் அளிக்கப்பட்டுவிட்டன்.

    எம்.கே.டி கண்ணாடி போட்டுக் கொண்டு பாடும் பாடல், "அற்புத லீலைகள்" என்ற படத்தில், "சொற்றுணை வேதியன்" என்ற பாடல்.

    நான்காம் கேள்விக்குப் பதில் தெரியாமல் பலரும் இருந்த நேரத்தில், தாங்கள் சரியான விடை அளித்துள்ளீர்கள். ஜானகி இராமச்சந்திரன், பாபநாசம் சிவன் அவர்களின் அண்ணா மகள் என்பது சரியான விடையே.

    ஐந்தாம் கேள்விக்கு யாரும் சரியான் விடை கொடுக்கவில்லை. ஆலத்தூர் சகோதரர்கள் உண்மையிலேயே சகோதரர்கள் அல்ல. ஒன்றாகப் பாட்டுப் பாடி வந்த காரணத்தால் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

    - சிமுலேஷ்ன்

    ReplyDelete