Sunday, September 24, 2006

புகைப்படப் புதிர்-03


01. ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் தனது பாடல்களில், இரண்டு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவை என்னென்ன? (லல்லுவின் சினனமொன்று உண்டிங்கு)


02. இந்தக் கலைஞர் யார்? இவரது சகோதரரும் ஒரு புகழ் பெற்ற பல்கலை வித்த்கர்? இவர் பெயர் தெரியாதென்றால், இவர் சகோதரர் பெயராவது என்ன?
(இசைக் கலைஞனுக்கு ஏனோ திரையில் பாடல்கள் என்றால் அலர்ஜி)

03. இந்தப் புகழ் பெற்ற பாடகர் யார்? கச்சேரிகள் பல செய்திருந்தாலும், திரைப்படத்தின் மூலமே பெரிதும் புகழ் பெற்றார்? (மதுரை முதல் மருத வரை)


04. இவர்களுக்குள் என்ன சம்பந்தம்? (கூவி அழைத்தால் குரல் கொடுப்பாள்)


05. இந்தப் பிரபலம் யார்? (காதறந்த ஊசியும் வாராது கடைவழி காண்)

9 comments:

  1. 1.ஹரிகேன்
    2..........
    3.மதுரை சோமு[எனும் சோமசுந்தரம்]4.மருமகள்
    5.டி.எம். செளந்தரராஜன் [பட்டினத்தாராக]

    ReplyDelete
  2. சிவஞானம்ஜி,

    3. "மருதமலை மாமணியே முருகையா" புகழ் மதுரை சோமு என்பது சரியான விடை.

    5. பட்டினத்தாராக வந்தவர் டி.எம்.எஸ் என்பதும் சரியே. பாராட்டுக்கள்.

    மற்ற கேள்விகளுக்கான விடையை மீண்டும் முயற்சிக்கவும்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  3. Bombay Jayashree and Kavingnar Vaali?"Kuvi azhaithal" is Vaali's song, i think

    ReplyDelete
  4. வாலியா?

    ;=))))

    ReplyDelete
  5. 01. ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் தனது பாடல்களில், இரண்டு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவை என்னென்ன?

    லாந்தரு (lantern) மற்றும் ஷாலு (shawl) ஆகிய வார்த்தைகளாகும்.

    02. இந்தக் கலைஞர் யார்? இவரது சகோதரரும் ஒரு புகழ் பெற்ற பல்கலை வித்த்கர்? இவர் பெயர் தெரியாதென்றால், இவர் சகோதரர் பெயராவது என்ன?

    இவர் பெயர் எஸ்.ராஜம். சிறந்த இசைப் பாடகர் மற்றும் ஓவியர் ஆவார். இவரது சகோதரர் பல்கலை வித்தகர் வீணை எஸ்.பாலசந்தர்.

    03. இந்தப் புகழ் பெற்ற பாடகர் யார்? கச்சேரிகள் பல செய்திருந்தாலும், திரைப்படத்தின் மூலமே பெரிதும் புகழ் பெற்றார்?

    "மருத மலை மாமணியே முருகையா" புகழ் மதுரை சோமு என்கின்ற எஸ்.சோமசுந்தரம்.

    04. இவர்களுக்குள் என்ன சம்பந்தம்?

    பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கும் தமிழ்த் திரையுலகிம் முதன்முதலில் வாய்ப்பளித்தவர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

    05. இந்தப் பிரபலம் யார்?

    பட்டினத்தாராக வந்தவர் டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சௌந்தரராஜன்

    - சிமுலேஷன்

    ReplyDelete
  6. தயவு செய்து!
    எம்.எஸ்.வி; எந்தப் படத்தில் ,எந்தப் பாடல் ,பம்பாய் ஜெயசிரிக்குக் பாட வாய்ப்பளித்தார்.எனும் விபரம் தரமுடியுமா???
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  7. படத்தின் பெயர் - தம்பதிகள்

    ஆண்டு - 1983

    இயக்குநர் - முக்தா சீனிவாசன்

    நடித்தவர்கள் - சிவக்குமார், பூர்ணிமா ஜெயராம் மற்றும் சில்க் ஸ்மிதா

    படத்திலுள்ள அனைத்துப் பாடல்களயும் பாடியவர் எஸ்.ஜெயஸ்ரீ என்றழைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள்.

    "ஒருவன் ஒருத்தி" மற்றும் "வாடா கண்ணா, ஹரேஹரே கோகுலகிருஷ்ணா' என்ற பாடல்களை எஸ்.பி.பி அவர்களுடன் டூயட்டாகப் பாடியுள்ளார்.

    சில்க் ஸ்மிதா அவர்களுக்காகவும் ஒரு பாடல் அந்தப் படத்தில் பாடியுள்ளார்.

    எம்.எஸ்,வி படத்துக்குப் பதிலாக சில்க் ஸ்மிதா படம் போட்டிருந்தால், பின்னூட்டங்கள் நிறைய வந்திருக்குமோ?

    - சிமுலேஷன்

    ReplyDelete
  8. ஆஹா. இதைப் பார்க்காமல் விட்டுட்டேனே. போனால் போகட்டும். இந்த புதிர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சீரு, திரையிசையில் இராகங்கள் காணவே இல்லையே?

    ReplyDelete