Tuesday, December 19, 2006

குறும்புப் போட்டிக்கு கூட்டுத் தயாரிப்பு

தேன்கூடு+தமிழோவியம் "குறும்பு" போட்டிக்கு, டாபிகலாக ஏதேனும் படைக்க எண்ணம். ஆனால், இது ஒரு கூட்டுத் தயாரிப்பு; படங்கள் உதவி மட்டுமே என்னிடமிருந்து; குறும்பான கமெண்ட் கொடுத்துக் கலக்கப் போவது நீங்கள்தான். எங்கே உங்கள் குறும்புக் கமெண்டுகளை பின்னுட்டமாக இடுங்கள் பார்க்கலாம்.

- சிமுலேஷன்

1.
2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

ரெடி..... ஒன்...ட்டூ...த்ரீ.... ஸ்டார்ட்....

3 comments:

  1. என்னங்க ஒரேடியா இவ்வளவு படம் குடுத்துட்டீங்க? ஒரு 4-5 அப்படின்னா நிறையா பேரு வந்திருப்பாங்களோ? சரி என்னால முடிஞ்சது.

    1) இந்த பொது மாத்து, பொது மாத்துன்னு சொல்லறாங்களே? அப்படின்னா என்னாங்க?

    2) இந்த 100 குடுத்தா 200, 1000 குடுத்தா 2000 அப்படின்னு டபுள் ஆக்கித் தருவாங்களாமே. யாரையாவது தெரியுமா?

    3) பாட்டு புத்தகத்தை மறந்துட்டேனே, பேசாம இவன் பாடறதைப் பார்த்து பாட வேண்டியதுதான்.

    4) யோவ், என்னய்யா மிருதங்கம் வாசிக்கற. கொஞ்சம் நல்லாத்தான் வாசியேய்யா.

    5) காபின்னா, உங்க சபா காபிதான். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே.

    6) அவன் சரக்கு சரியில்லைங்க. என்ன அடிச்சாலும் கொஞ்சம் கூட கிக்கே ஏற மாட்டேங்குது.

    7) இப்ப நினைச்சாலும் அந்த பாயசம் டேஸ்டு சும்மா நாக்குல அப்படியே இருக்கேய்யா.

    8) கிடாரைக் கேட்டா இதைக் கொண்டு வந்து குடுத்துட்டாங்க. இதை வெச்சுக்கிட்டு என்னத்த செய்யறது?

    9) எலேய், தோட்டத்துல மாடு நுழைஞ்சு செடியெல்லாம் தின்னுக்கிட்டு இருக்கு, அத பாக்காம என்னல பண்ணறீங்க?

    10) இந்த வீணையில் இருந்த குடத்தைக் காணுமே, என் பொண்டாட்டி தண்ணி பிடிக்க கொண்டு போயிருப்பாளோ?

    11) பகவானே, என்னைப் போய் பாடச் சொல்றாளே. தயவு பண்ணி காப்பாத்துப்பா...!!!

    12) நான் பாடறது எனக்கே சகிக்கலை, இதை காசு குடுத்து எப்படித்தான் கேட்கறாங்களோ!

    13) டேய் வேலையத்த பசங்களா, எங்களை வெச்சு குறும்பா பண்ணறீங்க. பிச்சுபிடுவேன் பிச்சு. படவா ராஸ்கல்ஸ்.

    ReplyDelete
  2. ஒவ்வொருவரும் ஒருவேளை இந்த மாதிரி பாட்டைப் பாடறாங்களோ

    1. எடடா அந்த சூரிய மேளம்

    2. ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா

    3. எங்கிருந்தாலும் வாழ்க

    4. நீதானா அந்தக் குயில்

    5. ஒருவன் ஒருவன் முதலாளி

    6. இன்றுபோய் நாளை வாராய்

    7. ஏதோ நினைவுகள்
    கனவுகள் மனதிலே மலருதே

    8. தலைவாரி பூச்சூட்டி உன்னை
    பாடசாலிக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை

    9. போறாளே பொன்னுத்தாயி

    10. கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்

    11. உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

    12. நேற்று இல்லாத மாற்றம் என்னது
    காற்று என் காதில் ஏதோ சொன்னது

    13. போனால் போகட்டும் போடா

    ReplyDelete
  3. நன்றி கொத்ஸ் மற்றும் மதுமிதா,

    கடைசி படத்துக்கு, "போடா போடா புண்ணாக்கு" கூட சரியாக வருமென்று நினைக்கின்றேன்.

    சூப்பர் கமெண்ட்களை மட்டும் இறுதியில், தொகுத்து தனிப் பதிவிடலாமா?

    - சிமுலேஷன்

    ReplyDelete