Sunday, November 27, 2005

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இராகங்கள்

சங்கீத சீசன் துவங்கி விட்டது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் கர்னாடக இசையின் இராகங்களை எப்படி இரசிப்பது என்ற எண்ணத்தில் "ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்) ஒர் புத்தகம் பதிப்பித்துள்ளேன். இதில் 1800 பாடல்கள் 160 இராகஙளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இராகதிற்கும், ஆரோகணம், அவரோகணமும் மற்றும் பல சுவையான விஷயஙளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் குவிஜ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்ற 20ம் தேதி ஞாயிறு காலை பத்து மணியளவில் சென்னை, மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யா பவன் மினி அரங்கில்...

Tuesday, November 01, 2005

கிழவரும், சிறுவனும், கழுதையும்

'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு: ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள். பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான். வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள். உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான். சிறிது நேரம் சென்றது. இவர்களையே பார்த்துக்...