27.08.2006 ஞாயிறன்று மதியம், மயிலையில், "சென்னை தின விழா" கொண்டாட்டங்களின் நிறைவுப் பகுதியாக, "சென்னை குவிஸ்" ஒன்று பி.எஸ். மேல்நிலைப் பள்ளையில் நடைபெற்றது. இரண்டு பேர் கொண்ட குழு மட்டுமே கலந்து கொள்ள முடியும். தனியாகச் சென்ற நான், சுரேஷ் என்பரிடம், 'ஆன் த ஸ்பாட்' அறிமுகம் செய்து கொண்டு, குழுவாக கலந்து கொண்டேன். நடுநிலைப் பள்ளி மாணவர்களில் ஆரம்பித்து, சீனியர் சிட்டிசன்கள் வரை கலந்துகொண்ட இந்தக் குவிஸ்ஸில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, திரு.இராமமூர்த்தி (முன்னாள் தமிழ் கிரிக்கெட் வர்ணணையாளர்) அவர்களும் குடும்பத்துடன், கலந்து கொண்டார். குவிஸ்ஸை நடத்தியவர்...