Tuesday, November 24, 2009

மறு ஒளிபரப்பு

ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்."என்னம்மா? இந்த நேரத்திலே?""அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ.""எதுக்கும்மா?""அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்.""மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்""என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?""அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு""எதுக்கு?...""என்னடி இது? என்னோட டான்ஸ்...

வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி

அந்தக் காலத்தில் உடம்பு ஜுரமாக இருந்தால், டாக்டர் சாமிக்கண்ணுவிடம் போவது பழக்கம். அவரிடம் போய் உட்கார்ந்தவுடன், "வெளிக்கி எப்படிப் போச்சு?" என்றெல்லாம் விபரமாக கேட்டுவிட்டு, மெஜரால் போன்ற மாத்திரைகள் கொடுப்பார். அதனைப் பொடி செய்து தேனில் குழைத்துத் தருவார் அம்மா. ஒரிரு நாட்களில் ஜுரம் சரியாகிவிடும். அதுவரை சாத்துக்குடி, ப்ரெட் என்று சற்று விசேஷக் கவனிப்பு நடக்கும். அதனால அப்பப்ப ஜுரம் வந்தால் கூட நன்றாக இருக்குமே என்று ஒரு நப்பாசை வரும். சாமிக்கண்ணு டாக்டரின் பையன் ஜெயசீலனுக்கும் கிட்டத்தட்ட எங்கள் வயசுதான். ஒரு முறை டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கும்போது...