Thursday, June 14, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக்ஸ்

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாக்களில் "பஞ்ச்" வசனங்களுக்குப் பஞ்சமேயில்ல. "சிவாஜி" மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் சிவாஜி பஞ்ச் டயலாக்ஸ் இதோ .......................................................................... "வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!" - வீரபாண்டிய கட்டபொம்மன் "கோயிலில் கலகம் செய்தேன். உண்மைதான் கோயில்கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான்"...