Saturday, November 06, 2010

பந்து விளையாட்டும், பஞ்சரத்ன கீர்த்தனையும்

சமீபத்தில் 'பெட்ரோடெக் 2010" மாநாட்டிற்காக புது டெல்லி சென்றிருந்தேன். நோய்டாவிலிருந்து வந்த டாக்சி டிரைவர் ராம்சிங்கிற்கு புது டில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை போலும். ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்பாத், ஜனபாத், அக்பர் தெரு போன்ற முக்கிய தெருக்களிலெல்லாம் அழைத்துச் செல்கிறார். நானோ 'ஹிந்தி நஹி மாலும் ஹை' கேஸ். இருவரும் சேர்ந்து கொண்டு "விக்ஞான் பவனை" தேடிக்கொண்டு, இந்தியா கேட்டினை ஐந்து முறை வலம் வந்துவிட்டோம். திடீரென புதிதாக...

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில், ஜி.ராமநாதன் அமைத்த அழகான பாடல்தான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ஜி.ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும். இதன் பின்னரே சாருகேசி ராகம் கர்நாடக இசையிலும், த்மிழ்த்...