
கத்தார்
ஏர்வேஸ் விமானம் மினம்பக்கம் விமான
நிலையத்தில் தரையிறங்கிய போது மணி அதிகாலை
2.30. பாராசுட்டிளிருந்து குதிக்கத் தயாரானவர்கள் போல், ஸ்டொவ் செய்யப்பட்ட
பெட்டிகளை எடுத்து கொண்டு குதிக்கத்
தான பயணிகளை விமான நிலையம்
பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்க வைத்தது.
பிஸினஸ் க்ளாஸ் பெருமகனார்கள் முதலில்
இறங்க, 'கேட்டில் க்ளாஸ்' பயணிகள் பின்
தொடர்ந்தனர்.
எரோப்ரிட்ஜில்
ஜருகண்டி சொல்லாத குறையாக ஒவ்வொருவராக
மெதுவாக முன்னேறினர்....