Tuesday, December 18, 2007

பேஷ்...பேஷ்...காபின்னா இதான் காபி

"பேஷ்..பேஷ்... காபின்னா, இதான் காபி"

"என்ன அத்திம்பேர்.இந்த மினிஹால்லே, கான்டீன்னும் கெடையாது. காபியும் கெடையாது. எங்க போய் காபி சாப்பிட்ட்டேள்?"

"டேய் குடிச்சாதான் காபியா? கேட்டாக் காபியில்லையா? அபிஷேக் ராகுராம்னு ஒரு பையன் காபி ராகம் பாடினான் பாரு. அட்டகாசம்."

"அத்திம்பேர். மோகனம், கல்யாணின்னு சொன்னாப் புரியறது. சங்கராபரண்ம்னு சொன்னாப் புரியறது. காபின்னா என்ன? தமிழ்ப் பேரா?"

"அதெல்லாம் தெர்யலையேப்பா. வடநாட்லே kaafiனு சொல்றா. நாம் காபி, இல்லாட்டி காப்பி அப்டீங்கறோம்."

"குடிக்க்ற காப்பிலெ கும்பகோணம் டிகிரி,பீபரி, ரொபஸ்டா, சிக்கரி கலந்த காபின்னு வெரைட்டி இருக்றாப்ல, காபி ராகத்லேயும் வெரைட்டி இருக்கா?"

"நிச்யமா. கர்நாடக காபி, உபாங்க காபி, ஹிந்துஸ்தானி காபின்னு பலவகை இருக்கு. அதைத் தவிர வடநாட்ல வேற எந்த ப்ளெண்ட் போட்டாலும் அதை, 'மிஸ்ர காபி'ன்னு சொல்லிடுவாங்க.நாம பெரும்பாலும் பாடறது ஹிந்துஸ்தானி காபிதான். இந்தக் காபி ராகம் கரஹரப்ரியாங்ற 22ஆவது மேள்கர்த்தாவின் ஜன்ய ராக்ம். அப்படீன்னா, இதனோட ஆரோகணம், அவரோகணம் சொல்லு பார்ப்போம்."

"கரஹரப்ரியாவுக்கு, ஸ,ரி2,க2,ம1,ப,த2,நி2,ஸா - ஸா,நி2,த2,ப,ம1,க2,ரி2,ஸ .காபிக்கு,

ஆரோகண்ம்; ஸ,ரி2,ம1,ப,நி3,ஸா
அவரோகண்ம்: ஸ்,நி2,த2,நி2,ப,ப1,க2,ம1,ட2,ப்,க2,ரி2,ஸ,ந்3,ஸ

சரியா, அத்திம்பேர்?"

"ஆஹா. கலக்றியே. ஆரோகணம் எவ்வளவு சிம்பிளா இருக்கோ, அவரோகணம் அவ்வளவுக்கவ்வளவு காம்ளெஸா இருக்கு பார்த்தியா. ஆனா, நான் ஏற்கெனவே சொன்னா மாதிரி வெறும் ஆரோகணம், அவரோகணங்றது ஒரு ஸ்கேல் மட்டும்தாண்டா.

இந்திய இசைன்னாலே, கமகம் முக்கியம். சரி. சரி. கமகத்தைப் பத்தி அப்புறமா வெளக்கிச் சொல்றேன். ஒனக்கு, காபில்லே என்னென்ன பாட்டு தெரியும் சொல்லு?"

"நான் சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கவா? நம்ம கர்நாடிக், "என்ன தவம் செய்தனை யசோதாவையே, பார்த்திபன் கனவுலே, வேற மாதிரி ஹாண்டில் பண்ணியிருக்கார் பாருங்கோ. கேட்கறேளா?"

"ஆஹா. வீடியோ ஐபாடெல்லாம் வாங்கிட்டியா? பார்ததிபன் கனவு-ஆலங்குயில் பாட்டுதானே. போடு, போடு. பாக்கறேன்.""ரோஜா படத்லே வந்த, 'காதல் ரோஜாவே'காபிதான். அப்புறம், ரஜனி ஸ்ரீதேவி நடிச்சு, "ப்ரியா"ன்னு ஒரு படம் வந்ததே எய்ட்டிஸ்லே. இளையராஜாவோட "ஹேய் பாடல் ஒன்று. ஜேஸுதாஸும், ஜானகியும் பாடினது. அதுவும் ஒரூ நல்ல காபிதான்."

"சரி. அதையும் கேட்டுடலாம்"பாலபாஸ்கர்ங்றவரோட ஃப்யூஷன் ஒண்ணு இங்க இருக்கு. பாருங்கோ."சரிடா. ஒரேடியா சினிமாப் பாட்டு, ஃப்யூஷன்னு போட்டுண்டிருக்கியே. கர்நாடிக்லே என்ன தெரியும். ஒரு கர்நாடிக் பாட்டுப் போடேண்டா. "

"'என்ன தவம் செய்தனை' சொல்லிட்டேன். த்யாகராஜரோட, 'இந்த சௌக்ய', 'மீ வல்ல குணதோஷமேமி, அப்புறம், 'பருலன்ன மாட'ன்னு ஒரு ஜாவளி உண்டு.

இப்ப புரந்தரதாசரோட 'ஜகதோதாரணா' எம்.எஸ் பாடிக் கேட்கலாமா? இல்ல. பாக்கலாமா?"ஒரு நிமிஷம் அத்திம்பேர். பாட்டைக் கேட்டுண்டுருங்கோ. இத வந்துடறேன். ஆபீஸ் கலீக் ஒருந்தன் வந்திருக்கான். அவனைப் பாத்துட்டு வந்துடறேன். காபி சாப்பிடத்தான் கூப்பிடறான் போலயிருக்கு.

8 comments:

மதுமிதா said...

சிமுலேஷன் உங்களுடைய இசை குறித்த‌ அந்த புத்தகம் போட்டாச்சா?

ஆம் என்றால் பதிப்பகம், விலை குறித்து சொல்லுங்களேன்.

இலவசக்கொத்தனார் said...

காபின்னா காபிதான். பேஷ் பேஷ் ரொம்பப் பிரமாதமா இருக்கே!!

என்ன தவம் செய்தனை, ஜகதோதாரணா, குறை ஒன்றும் இல்லை (இரண்டாவது சரணம்), மைத்ரீம் பஜத என கர்நாடகப் பாடல்களாக அடுக்கினால் அப்படியே சின்ன சின்ன வண்ணக் குயில் (மௌன ராகம்), காதல் ரோஜாவே(ரோஜா), நீங்கள் சொன்ன இரு பாடல்கள் என சினிமாப் பாடல்களும் இருக்கிறது.

எம்.எஸ் அம்மா காபி பாடி கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைப்பது நிச்சயம்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஜகதோதரணா கேட்பதற்கு இதமாக இருந்தது.

Simulation said...

மதுமிதா,

வருகைக்கு நன்றி.

திரையிசப் பாடல்களில் கர்நாடக இசை குறித்து 2005 வெளிவந்த எனது "ராகசிந்தாமணி', என்ற புத்தகத்தின் இரண்டாம் அச்சு இப்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. விலை Rs.200.

கிடைக்குமிடம்:-
1. கச்சேரி பஸ்
2. கர்னாடிக் ம்யூசிக் புக் செண்டர்
3. சப்தஸ்வரா ம்யூசிகல்ஸ்
4. சாந்தி டெய்லர்ஸ்
5. கிரி ட்ரேடிங் ஏஜென்சி

- சிமுலேஷன்

Simulation said...

இலவசம், ஜீவா,

வருகைக்கு நன்றி.

ரொம்ப சீக்கிரம் சொல்லிவிட்டேன் ;)

- சிமுலேஷன்

sury said...

காஃபின்னா இதுன்னா காஃபீ..
அடியே எப்படி இருக்கு பாத்தியா !
நம்மாத்து டிகிரி காபி மாதிரியே இருக்கே !
இல்ல ! அதைவிட இன்னுமொரு படி மேலே இருக்கு.
எப்படி?
சூபர்.
மேனகா சுப்பு ரத்தினம்
சுப்பு ரத்தினம்
காபி குடியர்கள் நலச்சங்கம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
http://movieraghas.blogspot.com

Priya Venkatakrishnan said...

சிமுலேஷன்

முதல் முறை இங்க வரேன். கலக்கி இருக்கீங்க!!

அடிக்கடி வருவேன்!!
ப்ரியா

Nagarajan Sridhar said...

Super