Wednesday, January 20, 2010

புதிரோ புதிர்

1. கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் ராவ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று வழங்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில், விசாகப்பட்டினத்தில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டபோது மறைந்த கொல்லபுடி ஸ்ரீனிவாசராவ் அவர்களின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகின்றது. எந்தச் சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது?

2. மூன்று உயர்ந்த விளையாட்டு விருதுகளான அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது
அனைத்தையும் பெற்ற முதல் இந்தியர் யார்?

3. 5 -> 1 -> 3 -> 2. நான் வங்கித் துறையைச் சேர்ந்தவன். என் நினைவுகளிலிருந்து எண்களை நீக்க முடியாது. "ஹரி, ஷ்யாம், கோவிந்த்,
கிருஷ்ணா." எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருகின்றோம்.

4. Y என்ற கம்பெனியின் ஒரு தயாரிப்பான X என்ற பொருளானது, 2007-08 ஆண்டுகளில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழிதின் "பிராண்ட் ஈக்யுடி"யால், வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் முதல் இடமாகத் தேர்வு செய்யப்பட்டது. இப்பொருளானது ஆசியாவிலேயே அதன் வகைகளில் பெரியதாக இருந்தது. மஸ்தி (2004), கூலி நம்பர் 1 (1995), ஆவாரா பகல் தீவானா (2002), டார்ஜான் தி வொண்டர் கார் (2004), கோல்மால் ரிடர்ன்ஸ் (2008), ஜோரு கா குலாம் (2000) மற்றும் லஜ்ஜா (2001) ஆகிய திரைப்படங்களில் இந்தப் பொருள் குறித்து
பேசப்பட்டுள்ளது. X என்ற இந்தப் பொருளின் புகழுக்கு அதன் அறிவார்ந்த விளம்பரங்களும் ஒரு காரணமாகும். X மற்றும் Yயினைக் கண்டுபிடிக்கவும்.

5. காசிநாதுனி நாகெஸ்வர ராவ் பந்துலு என்பவரால் உருவாக்கப்பட்ட X என்பது Y என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைமையகம் பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டது. எனினும், அதன் பழைய தலைமையகமான Y என்பது இன்றும் Xன் புகழ்பெற்ற பொருளில் பொறிக்கப்பட்டுளது. ஆரம்பக் காலங்களில் இந்தப் பொருளை நாகேஸ்வரராவ் அவர்கள் இசைக் கச்சேரிகளில் இலவசமாக வழங்கிப் பிரபலப்படுத்தினார். x என்ற இந்தப் பொருள் என்ன? Y எந்த இடம்?

6. X என்ற நிகழ்ச்சி, "சிரிக்கும் புத்தா" என்றழக்கப்பட்டது. அது அமெரிக்காவில் "மகிழ்ச்சியான கிருஷ்ணா" என்றும் அழைக்கப்பட்டது. X என்ற இந்த நிகழ்ச்சி என்ன?

7. "வெஸ்டர்ன் இண்டியா வெஜிடெபிள் புராடக்ட்ஸ்" என்ற நிறுவனம், 1947ல் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள அமல்நேர் என்ற இடத்திலுள்ள ஒரு எண்ணெய் ஆலையில் துவங்கப்பட்டது. பின்னர் இதன் பெயர் "வெஸ்டர்ன் இண்டியா புராடக்டஸ்" என்று மாற்றப்பட்டது. இதன் உரிமையாளர் மறைந்த பின்னர், அவரது மகனால், X என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. X நிறுவனமானது சமையல் எண்ணெய், துணி துவக்கும் சோப்பு, மெழுகு மற்றும் டின் கலன்கள் முதலிய நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாகியது. X என்ற இந்த நிறுவனத்தின் தற்போதய பெயர் என்ன?

8. ரோமானியர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கிரேட் பிரிட்டன் பிரதேசத்தினை X என்ற பெயரால் குறிப்பிட்டனர். X இண்டஸ்ட்ரீஸ்
லிமிடெட் என்பதி கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு இந்தியக் கம்பெனியின் பெயராகும். இந்தக் கம்பெனி 1892 ஆம் ஆண்டில் 295 ரூபாய் மூலதனத்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. X ன் உற்பத்திப் பொருளுக்கு இரண்டாவது உலகப் போரின் போது நிறையக் கிராக்கி ஏற்பட்டு விற்பனை அதிகரித்தது. "தி எகனாமிஸ்ட்" பத்டிரிக்கை இது ஒரு மாபெரும் சகாப்தம் என்று குறிப்பிட்டது. X என்பது என்ன?

9. புபன் தகாத் என்ற உள்ளூர் கொள்ளைக்காரன் பெயரால் X என்ற இந்த இடம், "புபன்தங்கா" என்றழைக்கப்ப்ட்டது. X என்ற இந்த இடத்தில் Y என்ற புகழ்பெற்றவர் "பாத பவனா" என்ற பள்ளினைத் துவக்கினார். இதன் நோக்கமே, இயற்கைச் சூழலில் கல்வி பெறுவதுதான். Y "அமர் ஷோனார் பங்ளா" என்ற வங்க தேசத்தின் நாட்டுப்பண்ணையும் எழுதினார். X மற்றும் Yயினைக்
கண்டுபிடிக்கவும்.

10. இந்திய விடுதலைப் போராட்டத்தில் புகழ் பெற்ற " இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற கோஷத்தின் அடிப்படையில் முதலில் இவருக்கு "இன்குலாப்" என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர், தனது சொந்தப் பெயரான் "ஸ்ரீவஸ்தவா" என்ற பெயரை விடுத்து, இவர்தம் தந்தையார் எழுத்துலகில் பயன்படுத்திய புனைபெயரை உபயோகிக்கத் துவங்கினார். தனது இருபதுகளில் கப்பல் கம்பெனியில் தரகராக செய்து வந்த வேலையினை உதறி வேறு ஒரு துறைக்குச் சென்ற இவர், இன்று இந்தியாவில் புகழ் பெற்ற மனிதர்களில் ஒருவர். இவர் யார்?

ஸ்டார்ட் ம்யூஜிக்!

- சிமுலேஷன்

தூர்தர்ஷனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி


எதற்காக மேடையில் இத்தனை கலர்? எத்தனை கல்ர் என்று யாராவது சொல்ல முடியுமா?

- சிமுலேஷன்