Sunday, February 24, 2008

மாரமணனும் மாயக்கூத்தனும்

சென்ற முறை டல்லஸ் சென்றபோது, "உன்னிக்கிருஷ்ணன் கச்சேரி உள்ளது போலாமா?" என்றான் வைத்யா. ஆஹா, அமெரிக்கா வந்து மண்டை காய்ந்து கொண்டிருக்கும் நமக்கு "கரும்பு தின்னக் கூலியா?" என்றெண்ணி, உடனே சரியென்றேன். டல்லஸ்ஸின் "இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமி", அந்த சனி மாலை, நம்மவர்களால்களை கட்டியிருந்தது. "உன்னோட 'ராக சிந்தாமணி' புத்தகத்தையும் கொண்டு வா. யாராவது ஆர்வம் காட்டக்கூடும்" என்றதால், புத்தகப் பிரதிகளையும் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். கச்சேரி ஆரம்பிக்க...