ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S R2 G2 P N2 S
அவரோகணம்: S N2 P G2 R2 S
வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.
கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத்...