புயலுக்குப் என்ன பெயர்?மேற்கத்திய நாடுகளின் மரபை ஒட்டி, நாமும் புயலுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் பெயரில் என்ன? (What is in a name?) என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது. பாஜ் என்றும் பனூஸ் என்றும் யோசனையின்றிப் பெயர் வைப்பது ஆபத்தையே விளைவிக்கும். fanoos என்பதன் கூட்டுத் தொகை 6 ஆகும். இதனால் அதிக சேதங்கள் ஏற்படல்லாம். அதற்குப் பதிலாக fanoosh என்று ஒரு h சேர்த்துக் கொண்டால் சேதங்கள் குறைய வாய்ப்புண்டு. அமெரிக்காவில் ரீட்டா என்ற புயல்லால் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். காரணம் புயலுக்கு மட்டும் ர, ரா, ரி, ரீ என்று ரன்னகரத்தில் துவங்குமாறு...