Showing posts with label அபூர்வ ராகங்கள். Show all posts

Tuesday, August 02, 2011
Tuesday, July 19, 2011
அபூர்வ ராகங்கள் அமெரிக்க வானோலியில்
நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா (ஸ்ரீ ஸ்ரீ) அமெரிக்காவில் ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள தமிழர்களிடையே பிரபலமானவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர்.
ஸ்ரீ ஸ்ரீயும் நானும் சேர்ந்து இன்று "தமிழ்த் திரையிசையில் அபூர்வ ராகங்கள்" என்ற நிகழ்ச்சியினை நடத்துகின்றோம். விபரங்கள் வருமாறு:-

July 9th 7. 30 am PST (8 PM IST) Very special program
Aboorva Raagangal in Tamil Film Music -Live
(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:00 )
Tamizh Radio - http://www.tamizhradio.com/
visit www.itsdiff.com for the weekly radio program archives - KZSU Stanford Radio 90.1 FM
Tune in to 90.1 FM or listen live via internet on Wed 6 - 9 am http://kzsulive.stanford.edu/
- சிமுலேஷன்

Sunday, July 03, 2011
அபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriya
ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S R2 G2 P N2 S
அவரோகணம்: S N2 P G2 R2 S
வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.
கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.
இதே ராகத்தில், இதே மெட்டினில், "சிவகவி" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் "மனம் கனிந்தே" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.
MMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் "ஆனந்த நடனம்" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.
கல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், "காற்றினிலே வரும் கீதம்", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் "இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்", என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.
கர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.
மற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலாம்.

Tuesday, June 15, 2010
அபூர்வ ராகங்கள்
நாம் அன்றாடம் கேள்விப்ப்டும் கல்யாணி, காம்போதி போன்ற ராகங்கள தவிர, சில் ராகங்கள் வெகு அரிதாக பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை அபூர்வ ராகங்கள் என்று சொல்லலாம். இந்த அபூர்வ ராகங்களில் சிலவற்றினைப்பற்றி முன்பு எனது பதிவிகளில் எழுதியிருக்கின்றேன். இந்த நட்சத்திர வாரத்தில் அவற்றை மீள் பதிவாக இடுவதற்குப் பதிலாக, ஒரு பதிவின் கீழ் இற்றைப்படுத்தினாலென்னவென்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.
ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை. இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த ராகம், நினைவுக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரோதஸ்வினி ராகத்தினைப் பற்றிய எனது பதிவு இங்கே.
சாவித்ரி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். இந்த ராகத்தில் கர்நாடக இசையில் பாடல்கள் ஏதும் அமைந்ததாகத் தெரியவில்லை. தமிழ்த் திரையிசையில் சாவித்ரி ராகத்தில் அமைந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி நாலே பாடல்கள்தான் உள்ளன. சாவித்ரி ராகம் குறித்து இங்கே எழுதியுள்ளேன்.
மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகமாகும். இந்த ஆரோகணம், அவரோகணத்தினைப் பார்த்தால் வெறும் நான்கே நான்கு ஸ்வரங்கள் தான் உள்ளன. நாலு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு ராகம் இருக்க முடியும்? அதில் எப்படிப் பாட முடியும்? என்று கேட்டால், சங்கீத மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவால் மட்டுமே இது முடியும் என்றுதான் சொல்லலாம். ஆம். இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு. மஹதி ராகத்தினப் பற்றிய எனது பதிவு இங்கே.
ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். இந்தப் பதிவினில் ஜோ ராகத்தினைபற்றி எழுதியுள்ளேன்.
பட்தீப் வட இந்திய இசையில் அடிக்கடி பாடப்படும் ராகம் என்றாலும், இந்த அழகான ராகம் தென்னிந்திய இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. 'பட்தீப்' ராகம் சில சமயங்களில் 'படதீப்' என்றும், 'பட்டதீப்' என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இந்த ராகம் 22ஆவது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும். பட்தீப் ராகம் குறித்தான எனது பதிவு இங்கே.
சல்லாபம் என்ற ராகம் சூர்யா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ராகம் 14ஆவது மேளகர்த்தா ராகமான 'வகுளாபரணம்' என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும். சல்லாபம் கிட்டத்தட்ட ஹிந்தோளம் என்ற ராகத்தினை ஒத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் ஹிந்தோளத்தில் சாதாரண காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபத்திலோ, அந்தர காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபம் ராகம் பற்றி இந்தப் பதிவினில் எழுதியுள்ளேன்.
அபூர்வ ராகங்களைக் கேட்டு மகிழுங்கள்.

Thursday, March 04, 2010
அபூர்வ ராகங்கள்-06 - சல்லாபம் (aka) சூர்யா (Sallabam or Surya)
'சல்லாபம்' என்ற ராகம் 'சூர்யா' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ராகம் 14ஆவது மேளகர்த்தா ராகமான 'வகுளாபரணம்' என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும்.இதன் ஆரோகணம் அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S G3 M1 D1 N2 S
அவரோகணம்: S N2 D1 M1 G3 S
சல்லாபம் கிட்டத்தட்ட ஹிந்தோளம் என்ற ராகத்தினை ஒத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் ஹிந்தோளத்தில் சாதாரண காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபத்திலோ, அந்தர காந்தாரம் இடம் பெறுகின்றது.
முதலாவதாக டாக்டர்.கடம் கார்த்திக் இயற்றிய சல்லாப ராக உருப்படியினைப் பார்ப்போம். கீ போர்ட் சத்யாவும் வாசிக்கின்றார்.
அடுத்தபடியாக முன்னொரு பதிவில் ரஸிகப்ரியா பாடி, நம் மனதையெல்லாம் கொள்ளைகொண்ட காவலம் ஸ்ரீகுமார் அவர்கள் பாடிய சல்லாபம் ராகத்தில் அமைந்த பஜன் கேட்போம்.
இப்போது கிஷோர் பல்லே என்ற இளைஞர் இயற்றி, ஸ்ரீநிதி என்ற இளைஞி பாடிய "சுந்தரவதனா சூர்யநயனா" என்ற பாடலைக் கேளுங்கள்.
தமிழ்த் திரைப்படப்பாடல்களை எடுத்துக் கொண்டால், நினைவுக்குத் தெரிந்து சல்லாப ராகத்தில் முதன்முதலாக பாடல் போட்டது நம்ம இளையராஜா அவர்கள்தான். ஆம். 'தாய் மூகாம்பிகை' என்ற படத்தில் அமைந்த 'இசையரசி என்னாளும்" என்றப் போட்டிப் பாடலாகும். முதன் முதலாகக இந்தப் பாடலைக் கேட்பவாராக இருந்தால் பாடலின் கிளைமேக்ஸினை காணத் தவறாதீர்கள்.
சமீப காலங்களில் வந்த சல்லாப ராகப் பாடல் வித்யாசாகர் இசையமைத்த சந்திரமுகி படத்தில் வரும் 'ரா ரா சரசுக்கு ரா' என்ற பாடலாகும். கேட்போமா? இடையே வரும் ஸ்வரபேதங்களை கண்டுகொள்ள வேண்டாம்.
சல்லாப ராகம் இப்போது மனதில் நன்றாக பிடிபட்டதா? அடுத்த பதிவில் சந்திப்போமா?

Saturday, February 27, 2010
அபூர்வ ராகங்கள்-05 - பட்தீப் (Patdeep)
பட்தீப் வட இந்திய இசையில் அடிக்கடி பாடப்படும் ராகம் என்றாலும், இந்த அழகான ராகம் தென்னிந்திய இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. 'பட்தீப்' ராகம் சில சமயங்களில் 'படதீப்' என்றும், 'பட்டதீப்' என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இந்த ராகம் 22ஆவது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: N2 S G2 M1 P N2
அவரோகணம்: S N2 D2 P M1 G2 R2 S N
இதன் ஆரோகணம், அவரோகணம் நிஷாதத்தில் தொடங்கி, நிஷாதத்தில் முடிவதால், இதனை "நிஷாதாந்திய" ராகம் என்றும் சொல்லலாம்.
வட இந்திய இசையில் இந்த ராகம் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றது என்பதனை இங்கே கேட்கலாம்.
அப்புறம், நம்ம உன்னிகிருஷ்ணன் பட்தீப் ராகத்தில் ஒரு அஷ்டபதி பாடியிருக்கார். இங்கே போய் அந்த 8ஆவது பாட்டைக் கேட்கலாம். அதே மியூசிக் இண்டியா தளத்தில் பட்தீப் என்று தேட லால்குடி மற்றும் ஸ்ரீமதி ப்ரம்மானந்தம் அவர்களின் மீராபஜனும் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் பட்தீப்புக்கும் இந்த மீராபஜனுக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிந்துபைரவியினை யாரோ புண்ணியவான் தவறாகப் பட்தீப் என்று tag பண்ணிவிட்டார்கள் போலத் தெரிகின்றது. விபரம் தெரிந்தவர்கள் நான் சொல்வது சரியா என்று சொல்ல வேண்டும்.
தமிழ்த் திரையுலகினை எடுத்துக் கொண்டால், ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு, என்று ஒரே ஒரு பாடல்தான் பட்தீப் ராகத்தில். அதுவும் 1956ஆம் ஆண்டு வெளிவந்த "ரம்பையின் காதல்' படத்தில் வந்த "சமரசம் உலாவுமிடமே" என்ற சுடுகாட்டினைப் பற்றிய ஒரு அருமையான பாடல். அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் உணர்ச்சியுடன் பாடியது. ஒரிஜினல் பாடலின் சுட்டி கிடைக்கவில்லை. ஜெயா டி.வியில் பாலாஜி என்ற இளைஞர் பாடியதை இங்கே போட்டுள்ளேன். நல்ல முயற்சி!
பட்தீப் ராகத்தில் வேறு ஏதெனும் பாடல் தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்தத் தொகுப்பினிலே சேர்த்து விடுகின்றேன்.

Friday, February 19, 2010
அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog)
ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S G3 M1 P N2 S
அவரோகணம்: S N2 P M1 G3 R3 S
இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம். காஷ்மீரத்து இசைக் கருவியான சந்தூர் எனப்படும் இசைகருவியில் இந்த ராகத்தினை வாசிக்கக் கேட்க, ஆனந்தப் பரவச நிலை ஏற்படும்.
ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். முதலில் பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் இந்த ராகத்தினை வாசிப்பதை கேட்போமே.
அடுத்தபடியாக எஸ்.காயத்ரி சதாசிவ ப்ருமேந்திராவின் "ஸ்மரவாரம் வாரம்’ என்ற பாடலைப் பாடுவதை இங்கே கேட்போம்.
இந்த உருப்படிகளையெல்லாம்விட, எனக்கு மிகவும் பிடித்தது, கடம் கார்த்திக் குழுவினரின் ஜோக்தான். எம்பார் கண்ணன், கீ போர்ட் சத்யா ஆகியோருடன் வாசிக்கும் ஜோக் ராக உருப்படியினை நேரிலும் கேட்டிருக்கின்றேன். நீங்களும் கேளுங்களேன்.
தமிழ்த் திரைப் பாடல்களில் ஜோக் ராகத்தில் அமைந்த பாடல்கள் என்னென்ன?
1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்
2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
இந்தத் தமிழ்த் திரைப்பாடல்களின் சுட்டிகள் கிடைக்கவில்லை.
திரைப்பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் என்றால் அது ஒரு மலையாளப் படப்பாடலாகும். அது என்னெவென்று இந்நேரம் கண்டுபிடித்திருபீர்களே? ஆமாம். "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" என்ற அருமையான படம்தான் அது. "ப்ரம்மதவனம் வேண்டும்" என்ற அந்தப் பாடல் ஜேஸுதாஸின் ஒரு அழகிய படைப்பு. பாடுவதற்கு கடினமான பாடல். ஆனால் கேட்பதற்கு சுகமான பாடல். கேளுங்கள் இப்போது.

Saturday, February 13, 2010
அபூர்வ ராகங்கள்-03-மஹதி
5:55 PM
Balamurali Krishna, Mahathi Raga, Rare ragas, அபூர்வ ராகங்கள், இசை, பாலமுரளி கிருஷ்ணா, மஹதி ராகம்
No comments
மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகாணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S G3 PA N2 S
அவரோகண்ம்: S N2 PA G3 S
இந்த ஆரோகணம், அவரோகணத்தினைப் பார்த்தால் வெறும் நான்கே நான்கு ஸ்வரங்கள் தான் உள்ளன. நாலு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு ராகம் இருக்க முடியும்? அதில் எப்படிப் பாட முடியும்? என்று கேட்டால், சங்கீத மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவால் மட்டுமே இது முடியும் என்றுதான் சொல்லலாம். ஆம். இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு.

சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராகத்தினை அறிமுகம் செய்ததாகத் தெரிகின்றது. இந்தக் கச்சேரியிலிருந்து பாடிய "மஹதி" ராகப் பாடலான "மஹனீய மதுர மூர்த்தே" என்ற பாடலைக் கேட்போமா?
'அபூர்வ ராகங்கள்' தமிழ்த் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். விஸ்வநாதன் தற்செயலாக பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கின்றாராம். அப்போதுதான் பாலமுரளி தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் உருவானதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான "அதிசய ராகம்; ஆனந்த ராகம்; அழகிய ராகம்" என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. அதிசய ராகத்தினைக் கேளுங்கள் இங்கே.
கொசுறுச் செய்தி: மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், 'எந்தப் படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார்', என்று நீங்கள் வியப்பது புரிகின்றது. முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரத இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டுபடும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.
- சிமுலேஷன்
Friday, February 12, 2010
அபூர்வ ராகங்கள்-02-சாவித்ரி
சாவித்ரி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும்.. இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S G3 M1 P N2 S
அவரோகணம்: S N2 P M1 G3 S
இந்த ராகத்தில் கர்நாடக இசையில் பாடல்கள் ஏதும் அமைந்ததாகத் தெரியவில்லை. ஏன்? விருத்தம், RTP போன்ற வகையறாக்களைக் கூட யாரும் பாடுவதாகத் தெரியவில்லை. நினைவுக்குத் தெரிந்த வரையில் எல்.சங்கர் மட்டுமே வயலினில் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். அதுகூட சாவித்ரியில் தொடங்கிப் பின்னர் ஒர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. இந்த சாவித்ரி ராகமாலிகையைக் கேட்க வேண்டுமென்றால் இங்கே சென்று கேட்கலாம்.
தமிழ்த் திரையிசையில் சாவித்ரி ராகத்தில் அமைந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி நாலே பாடல்கள்தான் உள்ளன. இவற்றில் முதன்மையானது எது என்றால் இசைஞானி இளையராஜா இசையமைத்து ஜெயச்சந்திரன் தனது குழுவினரோடு பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடலாகும். இது, 'காற்றினிலே வரும் கீதம்' என்ற திரைப்படத்தில் அமைந்துள்ளது. இடையிடையே 'தையரத் தையா; தையரத் தையா' என்று வரு கோரஸை கேட்கும்போது நாமும் அந்தப் படகில் சவாரி செய்வது போலவே இருக்கும். இன்டர்லூடாக வரும் புல்லாங்குழல் இசை அனைவரையும் மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது. என்னுடைய பேவரைட் பாடல்களில் இதுவும் ஒன்று. எனது மனைவிக்கும்கூட. இந்தப் பாடலைப் பாடித்தான் அவளைப் பதின்ம வயதில் மயக்கினேனாம். (பிப்ரவரி 14ஐ நெருங்கும்போது தானாக இதையெல்லாம் எழுதக் தோன்றுகின்றது). இப்போது இந்தப் பாடலைக் கேட்போமா?
அடுத்தாக 'புன்னகை மான்னன்' படத்தில் வரும் "கவிதை கேளுங்கள்" என்ற பாடல். இதுவும் சாவித்ரி ராகத்தில் அமைந்ததுதான்.
மூன்றாவது பாடல், நம்ம டி.ஆர் இசையமைத்த "வசந்தக் காலங்கள்" என்ற பாடல். இடம் பெற்ற திரைப்படம் 'ரயில் பயணங்களில்". இதுவும் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் என்று தெரியும்போது, ஒரு வேளை சாவித்ரி ராகம் மளையாளத்தில் பரவலாகப் பாடப்படும் ராகமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
நிறைவாக 'அழகன்' திரைப்படத்தில் இடம் பெற்ற "துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி" என்ற பாடல். சிறுவர், சிறுமியர் கோரஸாகப் பாடிய பாடல். பாடலின் அமைந்துள்ள தாளக்கட்டினைக் கவனித்தால் காட்சியமைப்புக்குப் பொருத்தமாக இசையமைத்திருப்பது தெரிய வரும்.
இன்னொமொரு சாவித்ரி தெலுங்குத் திரையுலகிலிருந்து. பாடியவர் மனோ.
மேலே கண்ட எல்லாப் பாடல்களுமே வெவ்வேறு மெட்டுக்களில் அமைந்திருப்பதனால் வெவ்வேறு ராகங்களில் அமைந்திருப்பது போலத் தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தால் அவற்றினிடையே இழையோடும் "சாவித்ரி" ராகத்தினை அறிந்து ரசிக்கலாம்.

Sunday, February 07, 2010
அபூர்வ ராகங்கள்-01-ஸ்ரோதஸ்வனி
4:28 AM
Rare ragas, Srothasvini Raga, Srothaswani, அபூர்வ ராகங்கள், இசை, ஸ்ரோதஸ்வனி ராகம்
7 comments
ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை.
இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம் - S G2 M1 P N3 S
அவரோகணம் - S N3 P M1 G2 S
இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த ராகம், நினைவுக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பாடல் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற படத்தில் இடம் பெரும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்ற பாடல். ஜேசுதாஸ் மற்றும் சுசீலா குரலில் பாடப்பட்ட ஒரு இனிமையான பாடல்.
இரண்டாவது பாடல் "நீங்கள் கேட்டவை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஓ. வசந்த ராஜா" என்ற பாடலாகும். இதுவும் ஸ்ரோதஸ்வனியில் அமைந்த ஒரு இனிமையான பாடலாகும். இதன் சுட்டி கிடைக்கவில்லை.
கர்நாடக இசையில் இந்த ராகத்தைக் கேட்க வேண்டுமென்றால், வயலின் எம்பார் கண்ணனும், கீ போர்ட் சத்யநாராயணவும் சேர்ந்து வாசித்துள்ள ஒரு அருமையான ஆலாபனையைக் கேட்க வேண்டும். கடந்த வருடம் லாஸ் ஏஞ்கல்ஸ் நகரில் இதனை வாசித்துள்ளார்கள். இந்த ஆலாபனையைக் கேட்கும்போது யாராக இருந்தாலும் சில நிமிடங்களுக்காவது பரவச நிலை அடைவது நிச்சயம்.
இந்த ராகத்தில் மேலும் பாடல்கள் இருப்பதாகத் தெரிந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

Subscribe to:
Posts (Atom)