
"டெலெராட்" என்ற பெயர் கொண்ட வால்வ் ரேடியோ மட்டும் வைத்திருந்த எங்கள் இசை வாழ்வில் வசந்தம் வீசியது ஒரு நாள். உறவினரின் திருமணத்திற்கு கோவை சென்றிருந்த அம்மாவும், அப்பாவும் திரும்பி வரும்போது சர்ப்ரைஸாக "ரெகார்ட் ப்ளேயர்" ஒன்று வாங்கி வந்தது கண்டு நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனால், அதற்கு எலெக்ட்ரிக் கனெக்ஷன் எப்ப்டிக் கொடுப்பது என்பது மட்டும் புரிபடவில்லை. எந்த இடத்தில் எலெக்ட்ரிக் ப்ளக் இருக்கு என்றே தெரியவில்லை. மறுநாளே, கோவைக்கு...