Monday, October 17, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - ப்ருந்தாவன சாரங்கா

22ஆவது மேஎளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகங்களில் ஒன்று ப்ருந்தாவனா சாரங்கா. தேசீய ராகங்களிலும் ஒன்றான இந்த ராக்கம் மயக்கம் தரவல்ல ராகம் என்றால் மிகையாகாது. பக்தி ரசமும் இந்த ராகத்தில் சொட்டுவதனால் பஜன் மற்றும் ஸ்லோகங்கள் பாட இசைந்த ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ் ரி1 ம1 ப் நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ம1 ரி2 ஸ்

இது பிரபலமான் ராகமான மத்யமாவதி போல இருக்கும். ஆனால் ஆரோகணத்தில் கசிக நிஷாததிற்குப் பதிலாக காகலி நிஷாதம் வரும். அதுவே மத்தியமாவதிக்கும் ப்ருந்தாவன சாரங்காவிற்கும் உள்ள வித்தியாசம். வட இந்திய இசையில் உள்ள ப்ருந்த்தாவனி இதை பெரிதும் ஒத்த ராகம். இப்போது ப்ருந்தாவன சாரங்காவில் அமைந்த தமிழ்த் திரைப் படப் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' திரைப்படத்தில் வரும் 'சிங்காரக் கண்ணே' என்ற பாடலைப் பார்ப்போம். வாரலட்சுமி அவர்கள் பாடியது. தமிழ்ப் பாடலின் சுட்டி கிடைக்காதலால் இதே பாடலின் தெலுங்கு வர்ஷன் இங்கு கொடுக்கின்றேன்.அடுத்து 'படித்தால் மட்டும் போதுமா?' படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற பாடலான 'பொன்னோன்று கண்டேன்' என்ற பாடல்.  சிவாஜிக்கும்,, பாலாஜிக்கும் முறையே டி.எம்.எஸ் அவர்களும் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள்.ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் ' கண்ணன் முகம் காண' என்ற பாடலை பாடியிருப்பவர்கள் ஜெயச்சந்திரன் மற்ற்றும் வாணி ஜெயராம்.அடுத்து வருவது 'ஒரு தலை ராகம்' படத்தில் வரும் பாடல். இதில் வரும் பாடல்கள் அனைத்துமே பிரபலமானவை. இதில் மிகவும் இனிமையான பாடல் 'இது குழந்தை பாடும் தாலாட்டு' ஆகும். முரண்பாடுகள் ஒவ்வொன்றையும் பட்டியலிடும் இந்தப் பாடலில்  ப்ருந்தாவன சாரங்கா சொட்டி வழிகின்றது.'இலக்கணம் மாறுதோ' என்ற இந்தப் பாடல் இடம் பெறும் படம் 'நிழல் நிஜமாகிறது' எஸ்.பி.பியின் இனிய குரலில்.ஜேசுதாஸ் குரலில் 'மரகதவல்லிக்கு மணக்கோலம்' என்ற பாடல் இடம் பெறுவது 'அன்புள்ள அப்பா' என்ற படம்.சமீபத்தில் 2005ல் வெளிவந்த பாடல்களில் ப்ருந்தாவன் சாரங்காவில் அமைந்த ஒரு பாடல் 'டீஷ்யூம்' படத்தில் இடம் பெறும் 'நெஞ்சாக் கூட்டில் நீயே நிற்கிறாய்" என்ற பாடல்- சிமுலேஷன்

கணையாழி கடைசிப் பக்கங்களும் தமிழ்ப் பதிவர்களும்

ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் வாசகர்களுடன் சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வது சுஜாதாவுக்குக் கை வந்த கலை. ஆனால் அந்த விஷயம் ரொம்பச் சின்ன விஷயமாக இருந்தால் அதே போல பல விஷயங்களை ஒரே குடையின் கீழ் தொகுத்து எழுதி வந்தார். அதுதான் கணையாழி கடைசிப் பக்கங்கள். இதில் என்ன வசதி என்றால் இதுதான் எழுத வேண்டும் என்ற எந்த விதக் கட்டாயமும் இல்லாமல் மனதுக்குத் தோன்றிய விஷயங்களை எல்லாம் ஒரு கதம்பமாகத் தொகுத்து வழங்கலாம். ஒரு விஷயத்துக்கும் அடுத்த விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சொல்லுவது மட்டும் சுவாரசியமாக இருக்க வேண்டும்.

இந்த 'கணையாழி கடைசிப் பக்கங்கள்' உத்தி வசதியாகத் தோன்றுவதாகத் தெரிவதால் தமிழ் வலைப்பதிவர்கள் பலரும் எழுத பெரிதாக ஏதும் இல்லாத் போது ஆனால் தங்களைப் பாதித்த விஷயங்கள சின்னதாக இருந்தாலும் ஒரு மெட்லியாக தொகுத்து இடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரின் பதிவுகள் இங்கே:-

1. டோண்டு - நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்

2. கேபிள் சங்கர் - கொத்ட்து பரொட்டா

3. டி.வி.ராதாகிருஷ்ணன் - தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்

4. ஜாக்கி சேகர் - சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்

5. ஆர்.வி.எஸ் - திண்ணைக் கச்சேரி

6. சிமுலேஷன் - ஃபலூடா பக்கங்கள் ஹி..ஹி

இந்த மாதிரி கதம்பமாக எழுதும் வேறு ஏதேனும் பதிவர்களின் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அவற்றையும் இங்கு சேர்க்கின்றேன்.

- சிமுலேஷன்