Friday, April 06, 2012

குயிலாய் இருக்கும் - அபிராமி அந்தாதி

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே  விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய்....