கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் "மயிலாப்பூர் கொண்டாட்டங்கள்" நடைபெற்று வருவதனை முக்கால்வாசி மயிலாப்பூர்வாசிகளும் அறிந்து, அதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் வழக்கமே. அதில் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் குறித்த விவரணப் படங்கள் யாரேனும் எடுத்திருந்தால் அதன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மயிலாப்பூர் டைம்ஸின் வின்சென்ட் டிசோசா கேட்டிருந்தார்.'இதனை முயற்சித்துப் பார்த்தால்தான் என்ன?' என்றெண்ணி, நானும் ஒரு விவரணப் படமமெடுத்துள்ளேன். மயிலாப்பூர் ஆலமரங்கள் என்ற இந்த படத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று...