
என் முதல் பையன் ஆதித்யாவுக்கு கண்ணாடி அணிவது என்பது அறவே பிடிக்காது, என்றாலும் வேறு வழியில்லாது வெகு நாட்களாக கண்ணாடி அணிந்து வந்துள்ளான். கண் எக்சர்ஸைஸ் செய்து பவரை குறைந்தாலும், கண்ணாடி அணிவதை ஒரு போதும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாகத் தனது நண்பர்கள் பலரும் லேசர் ஆபரேஷன் செய்து கொண்டு கண்ணாடி அணிவதனையே விட்டுவிட்டார்கள் என்று சொல்லித் தானும் அப்படிப்பட்ட ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி வந்தான். எங்களது வழமையான...