Friday, May 29, 2015

தேவதை வந்தாள்

"சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..." கேப்டன், ராதிகாவைத் தள்ளி விட்டு மாவாட்டிக் கொண்டிருந்த காட்சியைக் டி.வி.யில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராமசர்மா. "என்னடி இது? அப்பா போய் சினிமாப் பாட்டெல்லாம் டி.விலே பாத்திண்டிருக்கார்?" "சித்தப்பா, நான் அப்புறமா சொல்றேன். நீங்க மொதல்லே, உங்க கையாலே அவருக்கு இந்தத் தயிர் சாதத்தை ஊட்டி விடுங்கோ" கஞ்சனூர்   ராமசர்மான்னா எப்படிக் கூட்டம் அலை மோதும். கும்மோணத்லேந்தும், தஞ்சார்லேந்தும் வண்டி வெச்சுக் கூட்டிண்டு போவாளே! ஆனா, இப்ப மனுஷன் இப்படிப் படுத்த படுக்கையாக் கெடக்கறாரே! "சரஸா,...