
"சென்னை தினம்", மற்றும் "சென்னை வார" விழாக்களையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, நேற்று முன் தினம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற "அனில் ஸ்ரீனிவாஸின்" பியானோ இசை மற்றும் சென்னை இசை குறித்தான 'லெக்டெம்'. காதுக்கு அருமையான விருந்து. கூடப் பாடியவர் சுபிக்ஷா ரங்கராஜன். ("கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடியவர்) இப்படிக்கூடஒரு காம்பினேஷன் இருக்க முடியுமா என்று முதலில் யோசிக்க வைத்துப் பின்னர் பார்வையாளர் அனைவரையும் பரவசப்படுத்தினார் 'கஞ்சிரா' புருஷோத்தமன்....