Tuesday, February 09, 2010

கமல் ஹாசனும், நானும், ராகசிந்தாமணியும்

சமீபத்தில் 'முத்துமீனாள்' எழுதிய "முள்" என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் (என் மனைவியின் தோழி சுபா மொழி பெயர்த்தது) வெளியீட்டு விழா புக் பாயிண்ட் அரங்கினில் நடைபெற்றது. கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர். விழா துவங்க சற்று நேரம் முன்பாகவே வந்திருந்த கமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் பரிசளித்தேன். ஒரிரு பக்கங்களைப் புரட்டிய பின், கர்நாடக இசை குறித்து சில அடிப்படைக்...