Saturday, July 05, 2008

கரம்சந்த் காந்தியும் கறி முயல்களும்

நாங்கள் உங்களுக்கு உயர்ரக முயல்கள் தருகின்றோம். அது போடும் குட்டிகள் 4 மாதம் கழித்து, 3 கிலோ வந்ததும் கிலோ நூறு ரூபாய் வீதம் அனைத்துக் குட்டிகளையும் உயிருடன் உங்கள் இடத்திலேயே வந்து, எடை போட்டு எடுத்துக் கொள்கின்றோம்.

மேலும் ஈமு கோழிகளையும் நாங்கள் தருகின்றோம். நீங்கள் பெற்று அதை முறையாக வளர்க்க வேண்டும். அது போடும் முட்டைகளை, ஒரு முட்டை 1500 ரூபாய் வீதம் நாங்களே உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். இதனுடைய கறி உயிருடன் எடை போட்டு கிலோ 800 வீதம் உங்கள் இடத்திலேயே வந்து பெற்றுக் கொள்கின்றோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளத் தேவையான இடம்:
மகாத்மா காந்தி அறக்கட்டளை

பிரபல வார இதழ் ஒன்றில் சமீபத்தில் பார்த்தது மேற்கண்ட விளம்பரம்.

- சிமுலேஷன்

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா - நூல் விமர்சனம்

ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355.

சமீபத்தில் இந்த விளம்பரத்தை தினமணியில் பார்த்திருப்பீர்கள். இரண்டாம் பக்கத்தில் ஒரு ஒரத்தில் ஏல விளம்பரம், கோர்ட்டு நோட்டீஸ் இதுக்கெல்லாம் மத்தியிலே பொடி எழுத்திலே வந்தது.

மேற்கண்ட இந்த விளம்பரத்தைப் பார்த்த ஓல்ஸோல் மிளகாய் மற்றும் வெல்ல வியாபாரியான ஏகாம்பரத்தின் இதயம் ஒரு தடவை துடிக்கிறதை நிறுத்திட்டு நின்று போய் அப்புறம் படபடவென்று அடிச்சுகிச்சி.

ஆசிரியருக்குக் கடிதத்தில் “காமத்தீ என்ற கதைக்கு ஜெயராஜ் படம் ரொம்ப ஓவர் ஸார்! ச.ராஜரத்தினம்”, என்ற ஒரு கடிதமும், “பராசக்தியாரே! கருணை பெரியதா? காதல் பெரியதா?”ன்னு ஒரு கேள்வி-பதில் மட்டுமே எழுதி அனுபவம் பெற்றிருந்த “அரச மணி’ என்ற புனை பெயரும் கொண்ட ராஜரத்தினம் என்ற பாத்திரத்தின் மூலம், “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற சூத்திரத்தை அழகாக விளக்குகின்றார் வாத்தியார் சுஜாதா. எண்பதுகளில் வத்திருந்த காரணத்தினால், “சுஜாதா சிறுகதைப் பட்டறை” என்ற ஒரு அமைப்பு இருந்தது கூடப் பலருக்கும் தெரிந்திருக்காது.

விசா பப்ள்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பின் விலை ரூபாய் 50 தான்.

- சிமுலேஷன்