
சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கான களம். நூற்றுச் சில பக்கங்கள் கொண்டது சுஜாதாவின் மெரினா என்ற இந்தக் குறுநாவல். குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது.
கதையின் முடிச்சு பலமானது அல்லதான். இருந்தாலும் தனது விறுவிறுப்பான நடையால் கட்டிப் போடுகின்றார் சுஜாதா. அதிலும் குறிப்பாக முதல் சில அத்தியாயங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஒரு புறம் ந்டுத்தரக் குடும்பத்தினர்களும், குழந்தைகளும் குதூகலமாக விளயாடிக் கொண்டிருக்கும் மெரினா...