மதுமிதா அவர்களின் புத்தகத்திற்கு ஒரு வலைபதிவர் என்ற முறையில் சுய அறிமுகம் செய்துகொண்ட போது "வலைப்பதிவர் சந்த்திப்புகள் மூலம் நண்பர்கள் சிலர், பலராகக் கூடும்" என்று எழுதியிருந்தேன். ஏற்கெனவே போண்டா புகழ் உட்லேண்ட்ஸ் சந்திப்புகளின் மூலம் டோண்டு ராகவன், ஜயராமன், டி.பி.ஆர்.ஜோசப், சிவஞானம்ஜி, மரபூர் சந்திரசேகரன், ஜி.ராகவன், மா.சிவகுமார், கிருஷ்ணா, ரவிச்சந்திரன், மதன், ஜயகமல், சரவணன் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. நேற்றைய தினம், மயிலை நாகேஸ்வரராவ் பூங்காவில் மசால் வடையுடன் மற்றைய வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது. அனைவருடனும், நேரம் செலவழிக்க முடியாவிடினும்,...