Friday, September 01, 2006

சென்னையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு

மதுமிதா அவர்களின் புத்தகத்திற்கு ஒரு வலைபதிவர் என்ற முறையில் சுய அறிமுகம் செய்துகொண்ட போது "வலைப்பதிவர் சந்த்திப்புகள் மூலம் நண்பர்கள் சிலர், பலராகக் கூடும்" என்று எழுதியிருந்தேன். ஏற்கெனவே போண்டா புகழ் உட்லேண்ட்ஸ் சந்திப்புகளின் மூலம் டோண்டு ராகவன், ஜயராமன், டி.பி.ஆர்.ஜோசப், சிவஞானம்ஜி, மரபூர் சந்திரசேகரன், ஜி.ராகவன், மா.சிவகுமார், கிருஷ்ணா, ரவிச்சந்திரன், மதன், ஜயகமல், சரவணன் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம், மயிலை நாகேஸ்வரராவ் பூங்காவில் மசால் வடையுடன் மற்றைய வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது. அனைவருடனும், நேரம் செலவழிக்க முடியாவிடினும், அறிமுகமும், யார் யார் என்ற விவரங்களும் அறிந்து கொள்ள முடிந்தது. வந்தவர்கள் பட்டியல் வருமாறு:- முத்து தமிழினி, பால பாரதி, ஜி.கௌதம், வரவணையான், ரோசா வசந்த், ப்ரியன், அருள், சிவஞானம்ஜி, ஜீவ், பாலகிருஷ்ணன் கீதா, பொன்ஸ், லக்கி லுக், பரஞ்சோதி, ஜெய்சங்கர், மா.சிவக்குமார், மற்றும் செந்தில். பலரது பெயர் விடுபட்டிருக்கலாம். பெயர் விடுபட்டவர்கள் தவறாக எண்ண வேண்டாம்.

இவ்வாறு சந்த்திப்புகள் அவ்வப்போது (அடிக்கடி அல்ல) நடப்பது ஆரோக்கியமான விஷயம். முடிந்தவரையில் அனைவரும் கலந்து கொள்வதும் குழு மனப்பான்மையையும் குறைக்க உதவும் என்று நம்புகின்றேன்.

மற்றபடி, சந்திப்பு விவரங்களை அவரவர்கள் தங்களுகே உரித்தான பாணியில் பதிவார்களென்று எண்ணுகின்றேன்.

-சிமுலேஷன்

10 comments:

துளசி கோபால் said...

//மசால் வடையுடன் மற்றைய வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது.//

ஹா......... மசால் வடையா? (-:

வல்லிசிம்ஹன் said...

எங்க ஊரிலேயெ ,எங்க தெருவிலேயெ, நடந்து இத்தனை பேரு வந்திருக்கீங்க.
மிஸ் பண்ணிட்டேனெ.

பதிவிலேயே நிற்கும் நல்ல உறவுகளைக் காப்பாற்ற இந்த
சந்திப்புகள் உதவும்.
நன்றி சிமுலேஷன்.

Krishna (#24094743) said...

இந்த சந்திப்பிற்க்கு கண்டிப்பாக வரவேண்டும் என எண்ணியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக சில கடைசி நிமிட அலுவல்களால் முடியவில்லை. அடுத்த முறை விடுமுறை தினங்களில் சந்திப்பு ஏற்பாடு செய்தால் அனைவரும் பங்கு பெற வாய்ப்பாக அமையும். பற்பல எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அருமையான சந்திப்பாகவே இருந்திருக்கும் என நம்புகிறேன்.

sivagnanamji(#16342789) said...

பயனுள்ள சந்திப்பு!
தொடரட்டும் இத்தகைய சந்திப்புகள்

vetrida puridal said...

அடுத்த சந்திப்பில் (சி)சந்திப்போம்

We The People said...

சிமுலேஷன் சார்,

மா.சிவக்குமார் இந்த சந்திப்புக்கு வரவில்லை என்பதை குறிப்பிட முடியவில்லை... மேலும் இந்த சந்திப்பில் பலரை சந்திக்க முடிந்ததில் சந்தோஷம், அங்க நடந்த விவாதம் வீணாகபோனதில் ஒரு மனவருத்தம்.

வணக்கத்துடன் said...

//அங்க நடந்த விவாதம் வீணாகபோனதில் ஒரு மனவருத்தம்//

அட, சந்திப்புகளாவது பிரயோசனமா இருந்திருக்கும்னு நெனைச்சா, அங்கியும் இதே கத தானா?

சரி, இதையேன் sivagnanamji அவர்கள் "பயனுள்ள சந்திப்பு" ங்கறார், Simulation அவர்கள் "அவ்வப்போது (அடிக்கடி அல்ல) நடப்பது ஆரோக்கியமான விஷயம்" அப்டீங்கறார்?

ஒன்னும் பிரியலயே...யாராவது வெளக்கி வையுங்க அய்யா.


இப்படிக்கு,
மசால்வடை, போன்டாக்களுக்கு (தற்போதைக்கு) ஏங்கும் ஒரு வலைபதிவன். :-(

கால்கரி சிவா said...

அதுசரி மசால் வடை கோஷ்டியும் போண்டா கோஷ்டியும் மீட் பண்ணி என்ன பேசினீங்க என சொல்லவே இல்லையே.

வெற்றி said...

படங்கள் எடுத்திருந்தால் ஆட்சேபனை இல்லையெனில் படங்களையும் பதிவிலிடுங்களேன்.

sivagnanamji(#16342789) said...

Rome was not made overnight

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவத்ற்கான சில நெறிமுறைகள் விவாதிக்கப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டன
[பார்க்க: சந்திப்பு தொடர்பான பாலபாரதியின் பதிவு]
அவ்வகையில் இது பயனுள்ள சந்திப்புதான்