Thursday, August 31, 2006

சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி

"குட் மார்னிங் சார்"

"குட் மார்னிங்"

"எது வரைக்கும் சார் போறீங்க?"

"கிண்டி ஸ்டேஷன் வரைக்கும். என்ன விஷயம்?"

"சார் எனக்கு அலெக்சாண்டர் ஸ்கொயர் வரைக்கும் போகணும்"

"ஓ"

"அங்கே, இன்னிக்கி ஒரு இன்டெர்வியூ"

"ஒகே. ஆல் த பெஸ்ட்"

"சார்..."

"என்ன?.."

"கொஞ்சம் லிப்ட் கொடுக்க முடியுமா?. நானே நடந்து போகலாமுன்னுதான் பார்த்தேன். நேத்திக்கி கால்ல ஒரு சுளுக்கு ஆகி விட்டது. டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்றாரு. ஆனா, இன்னிக்கின்னு பாத்து இந்த இன்டெர்வியூ. இது எனக்கு முக்கியமான இன்டெர்வியூ சார். ப்ளீஸ் லிப்ட் கொடுங்க சார்.

"!!! ??? @@@ ####"

"அட்லீஸ்ட், இந்த ரோடு எண்ட் வரைக்கும் லிப்ட் கொடுத்தால் போதும் சார்"

"@@@ (((((( !!!! @@@"

"சார் பாஸ்ட்டா நடக்காதீங்க சார். உப்பு மூட்டை தூக்கிறது ரொம்பக் கஷ்டம் ஒண்ணுமில்லே சார். ப்ளீஸ். என்னை முதுகிலே உப்பு மூட்டையாத் தூக்கிட்டுப் போய் இந்த ரோடு எண்ட்லே விட்டுடுங்க சார்"

"ஏன் சார் ஒடறீங்க. சார்... சார்'

(முன்னொரு நாள் ராஜ் டி.வியில் பார்த்த gag type நிகழ்ச்சியிலிருந்து)

- சிமுலேஷன்

7 comments:

பழூர் கார்த்தி said...

மொத கதையே, கடியா ????
விளங்கிரும்கோவ் :-)))

***

இருந்தாலும் நிறைய பேரை வந்து படிக்க வச்சருக்கீங்க போல இருக்கே, போனாப்போவுது... வாழ்த்துக்கள் :-)

***

நல்ல லிப்ட்டுதான் போங்க, உங்க ப்ளாக் ஹிட் கவுண்ட்டருக்கு !!!

Anu said...

ha ha ha....

மா.கலை அரசன் said...

Rombathaan Kusumbu. Aana, Nalla
irukku saar.

பழூர் கார்த்தி said...

படைப்புகளின் விமர்சனத்தை
இங்கே பாருங்கள்

Simulation said...

சோம்பேறிப் பையனின் விமர்சனம்:

"வித்தியாசமான படைப்பு, சரியான கடியுடன் டிவியில் பார்த்த ஓர் நிகழ்வை சுவையாக சொல்லியிருக்கிறார். சீரியல் திரைக்கதை போல் இருக்கிறது. முடிவு சற்று ஏமாற்றமளித்தாலும், நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில் வித்தியாசம், படைப்பில் மட்டும் !!

மதிப்பெண் : 65 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

மொத கதையே, கடியா ???? விளங்கிரும்கோவ் :-)))

இருந்தாலும் நிறைய பேரை வந்து படிக்க வச்சருக்கீங்க போல இருக்கே, போனாப்போவுது... வாழ்த்துக்கள் :-)
நல்ல லிப்ட்டுதான் போங்க, உங்க ப்ளாக் ஹிட் கவுண்ட்டருக்கு !!!
*****

சோம்பேறி பையன்,

விமர்சனத்திற்கு நன்றி.

"சீரியல் திரைக்கதை போல் இருக்கிறது."

கிட்டத்தட்ட இருபது வரிகள்கூட இல்லாத இந்தக் குட்டிக்கதையை சீரியல் திரைக்கதை போல் உள்ளது என்று சொல்லியிருப்பது உள்குத்தா? இல்லை வெளிக்குத்தா?

- சிமுலேஷன்

Unknown said...

:))))

Simulation said...

ஆஹா... நாமளே ஒட்டுப் போடாதபோது, பதினாறு பேர் வந்து நம்ம கதைக்கு ஒட்டுப் போட்டிருக்காங்களே!

நன்றிங்கண்ணா ! நன்றிங்கக்கா!

அப்புறம் போட்டியிலே கெலிச்ச அல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

- சிமுலேஷன்