Thursday, August 21, 2008

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

"சென்னை தினம்", மற்றும் "சென்னை வார" விழாக்களையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, நேற்று முன் தினம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற "அனில் ஸ்ரீனிவாஸின்" பியானோ இசை மற்றும் சென்னை இசை குறித்தான 'லெக்டெம்'. காதுக்கு அருமையான விருந்து. கூடப் பாடியவர் சுபிக்ஷா ரங்கராஜன். ("கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடியவர்) இப்படிக்கூடஒரு காம்பினேஷன் இருக்க முடியுமா என்று முதலில் யோசிக்க வைத்துப் பின்னர் பார்வையாளர் அனைவரையும் பரவசப்படுத்தினார் 'கஞ்சிரா' புருஷோத்தமன். உண்மையிலேயே இந்த பியானோ-கஞ்சிரா காம்பினேஷன் இரசிகர்கள் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. அனில் ஸ்ரீனிவாஸ் சென்னையில் வாழ்ந்த மேல்நாட்டு இசைக் கலைஞர்களின் பங்களிப்பு, சென்னையின் மேல் பாடப்பெற்ற பாடல்களைப் பற்றியும் அலுப்புத் தட்டாமல் பேசினார். இதில் சென்னையில் வாழ்ந்து பன்முகத் திறன் கொண்ட கல்கி அவர்களின் பங்களிப்பும் இடல் பெற்றது. கல்கி அவர்களின் "பூங்குயில் கூவும் பூஞ்சோலை" என்ற பாடல் சுபிக்ஷா ரங்கராஜனால் பாடப்பெற்றது. அந்த்க் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய் பாடலென்று நினைக்கின்றேன்.

காபி இராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் வரிகளும், மெட்டும், இசையும் என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. கூகிளார் உபயத்தில் நித்யஸ்ரீ அவர்கள் இதனைப் பாடியுள்ளதாக அறிந்தேன். நீங்களும் இதனைக் கேளுங்களேன்.



பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பனி மலரதனில் புது மணம் கண்டேன்
பனி மலரதனில் புது மணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்...ஒரு நாள்

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் ஒரு நாள்...ஒரு நாள்...

- சிமுலேஷன்

Thursday, August 14, 2008

பிறந்தநாள் வேஷ்டியும் காலணிப் பரிசும்

பொதுவாகவே பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும், 'பிராண்டட்' சட்டை பேண்ட் மற்றும் ஹோட்டல் வகையறாக்களுக்கு 1500-2000 ரூபாய் வரை செலவாவது வழக்கம். இந்த முறை சற்றே வித்தியாசமாகக் கொண்டாட எண்ணி, பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டு வேஷ்டி சட்டையுடன் முடித்துவிடத் திட்டம் போட்டேன். காரணம்*** இறுதியில் சொல்கிறேன். ஒரிரு நாட்கள் முன்பு தி.நகரில் கண்ணில் பட்ட ராம்ராஜ் ஷோ ரூமுக்குச் செல்ல எண்ணினேன். நடிகர் ஜெயராமை கலக்கலாக மாடலிங் செய்ய வைத்து, வேஷ்டி மார்க்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ள ராம்ராஜ் நிறுவனம் தி.நகர் பாண்டி பஜாரில் சமீபத்தில் தமது வேஷ்டி வகையறாக்களுக்காகப் பிரத்யேக ஷோ ரூம் ஒன்றினைத் திறந்துள்ளார்கள். சாதாரண ஜரிகை வேஷ்டி, மயில்கண் வேஷ்டி தவிர எத்தனை வெரைட்டி? ஆச்சரியமாக உள்ளது. இது வரை நீங்கள் பார்க்காத வண்ணங்களில், விதவிதமான கரைகளில் வேஷ்டிகள் இருப்பதைப் பார்த்தால் வேஷ்டிப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான். (ராம்ராஜ் எத்தனை நாடுகளில் மில் வைத்துள்ளாரகள் என்பது மற்றுமொரு வியப்பான விஷயம்? )
( மயில்கண் ஜரிகை வேஷ்டி)

(பருத்தி வேஷ்டி)

இந்த வேஷ்டி வகையறாக்கள் சாமான்யரும் வாங்கும் வண்ணம் சுமார் 200 ரூபாயிலிருந்து இருக்கின்றன. பாரம்பரிய உடை அணிய விருப்பம் இருப்பவர்களை ஒரு முறை இந்த ஷோ ரூமுக்கு விஜயம் செய்ய பரிந்துரைக்கின்றேன். வெளிநாடு வாழ் மக்களே, விரைவில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகமும் செய்யவுள்ளார்கள்.

***இன்று (14th) ஆங்கில வருடப்படி பிறந்தநாள்; நாளை நட்சத்திரம். நாளைய தினம் அருகிலுள்ள பள்ளிக்குக் குடும்பத்துடன் சென்று சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது 80 பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கவுள்ளோம். சந்தோஷத்திலேயே அதிக சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் தெரிகின்றது.

- சிமுலேஷன்