Tuesday, December 27, 2005

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா யாராவது செய்தால் எப்படி இருக்கும் அன்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். வெற்றிகரமாகவும், புதுமையாகவும், ஏதேனும் செய்து வரும் முத்ரா பாஸ்கர் உபயத்தால் நேற்று அந்த ஆசை நிறைவேறியது. நேற்று வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ப்ரீடம் ஹாலில் நடைபெற்ற இந்த கர்னாடிக் ஜுகல் பந்தி நிகஷ்ச்சியில், குழல், கீ போர்ட், சிதார், தபலா உதவியுடன் 8 பாடகர்கள் திரு.எல்.கிருஷணன் இசை அமைத்த 24 பாடல்களை பாடினர். உங்களில் பலருக்கும் தெரிந்த பாடல்கள்தான். பாடல்களின் விபரமும், பாடியவர்கள் பெயரும் தருகின்றேன். 1. பச்சை மாமலை போல் மேனி -...