Friday, March 05, 2010

அவுரங்கசீபும் தமிழ்த்திரட்டிகளும்

அரசர் அவுரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவராம். இருந்தாலும்  அவருக்கு ஏனோ இசை என்றாலே ஆகாது. இசை, நாட்டியம் போன்ற எல்லாவித நுண்கலைகளையும் அவரது ஆட்சிக் காலத்தில் தடை செய்தாராம்.      அதே போல வலைப்பதிவுகளை தங்கள் இணைப்பிலே திரட்டிக் கொள்ளும் தமிழ்திரட்டிகள், இந்தப் பதிவுகளை வகைப்படுத்த நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், சினிமா, தொழில் நுட்பம், கார்ட்டூன், கவிதை, ஆன்மிகம் போன்ற எத்தனை, எத்தனையோ பிரிவுகள் வைத்திருந்தாலும்...

ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-02 (Allied Ragas)

முன்கதை "அத்தே, ஜிஞ்சர் டீ சூப்பர்... மாமா.. பாட்டு நல்லா இருந்தா கேக்கறோம். ரசிக்கறோம். எதுக்காக இந்த ஆராய்ச்சியெல்லாம்? எங்க தலைவர் சொன்னா மாதிரி, அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.என்ன நாஞ்சொல்லறது?" "டேய் ஆதித்யா நீ சொல்றது வாஸ்தவந்தான். எதுவுமே நல்லதா இருந்தா, அனுபவிச்சா மட்டும் போதும். ஆராயத் தேவையில்லை. ஆனா நம்ம மாதிரி கோஷ்டிங்களுக்கு ஆராய்ச்சி பண்ணினா இன்னமும் அனுபவிக்கலாமேன்னு தோணும்.உதாரணத்தோட சொன்னா நல்லாப் புரியும்னு நினைக்கிறேன்." "வசந்தா மாமி,... உங்க வருன், அருண் ரெண்டு பேரும் வந்த்திருக்காங்கல்லியா? அவங்களக் கொஞ்சம் உள்ளே கூப்பிடுங்களேன்." "டேய்...வருண்,...அருண்......

ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-01 (Allied Ragas)

"2010ஆம் ஆண்டு நடக்க இருக்கும் நம்ம 'ராகசிந்தாமணி' கிளப்பின் முதலாவது கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் 'வருக்,வருக'வென வரவேற்கின்றேன்." "சிமுலேஷன் அண்ணா. என்னத்துக்கு இப்படியெல்லாம் ஃபார்மலா? வழக்கம் போல இன்ஃபார்மலா நடத்தலாமே?" "கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு, எல்லோரும் இன்னிக்கி மீட் பண்ணறோம். அதான் ஃபார்மலா ஆரம்பிச்சா ஒரு 'கெத்'தா இருக்குமேன்னுதான்." "கண்ணன் சார். முந்தா நேத்திக்கி எஃப்.எம்.கோல்ட்லே 'மாஞ்சி' ராகத்திலே ஒரு RTP கேட்டேன். இவர் என்னடான்னா அது மாஞ்சியே இல்ல. பைரவிதான் அப்படீங்கறார். நானும் மாஞ்சிதான்னு மாய்ஞ்சி. மாய்ஞ்சி...