Friday, March 05, 2010

ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-02 (Allied Ragas)


"அத்தே, ஜிஞ்சர் டீ சூப்பர்... மாமா.. பாட்டு நல்லா இருந்தா கேக்கறோம். ரசிக்கறோம். எதுக்காக இந்த ஆராய்ச்சியெல்லாம்? எங்க தலைவர் சொன்னா மாதிரி, அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.என்ன நாஞ்சொல்லறது?"

"டேய் ஆதித்யா நீ சொல்றது வாஸ்தவந்தான். எதுவுமே நல்லதா இருந்தா, அனுபவிச்சா மட்டும் போதும். ஆராயத் தேவையில்லை. ஆனா நம்ம மாதிரி கோஷ்டிங்களுக்கு ஆராய்ச்சி பண்ணினா இன்னமும் அனுபவிக்கலாமேன்னு தோணும்.உதாரணத்தோட சொன்னா நல்லாப் புரியும்னு நினைக்கிறேன்."

"வசந்தா மாமி,... உங்க வருன், அருண் ரெண்டு பேரும் வந்த்திருக்காங்கல்லியா? அவங்களக் கொஞ்சம் உள்ளே கூப்பிடுங்களேன்."

"டேய்...வருண்,...அருண்... ஒரு 5 நிமிஷம் உள்ளே வாங்கோ. மாமா கூப்பிடறார்."

"இங்க பாருங்கோ எல்லாரும். இவங்கதான் வருண் & அருண். வசந்தா மாமியின் twin sons. இவங்களைப் போன மீட்டிங்லேயே பார்த்திருப்பீங்க. இதிலே யாரு வருண்?, யாரு அருண்? அப்படீன்னு யாராவது சொல்லுன்ங்க பாக்கலாம்."

"ஆஹா. அப்படியே அச்சலா ஒரே மாதிரி இருக்காங்களே! இதிலே ஒரே மாதிரி டிரஸ் வேற. எப்படிக் கண்டுபிடிக்கறது தெரியலையே!"

"வசந்தா மாமி. உங்களுக்குக் ஒண்ணும் கன்ஃப்யூஷன் இல்லையே? நீங்க கண்டுபிடிச்சிடுவீங்கதானே?"

"ஆஹா, தாயார்க்காரிக்கு இதுகூட கண்டுபிடிக்க முடியாதா? மத்தவங்காளால முடியுமா?"

"லலிதா டீச்சர். நீங்க சொல்ல முடியுமா? யாரு வருண்? யாரு அருண்ன்னு?"

"ஓயெஸ். வலது பக்கம் நிக்கறது வருண். இடது பக்கம் நிக்கறது அருண்."

"இவ்வளவு பேரால முடியாதது.. லலிதா டீச்சராலே எப்படி முடிஞ்சுது?"

"அவங்க ரெண்டு பேருமே லலிதா டீச்சரோட ஸ்டூடண்ட்ஸ், போன ரெண்டு வருஷமா."

"ஓகே டீச்சர். ரெண்டு பேரும் ஒரே உயரம், ஒரே பருமன், ஒரே நிறம், ஒரே ஜாடை. இருந்தாலும் எப்படிக் கண்டுபிடிக்கறீங்க?"

"ரெண்டு வருஷமா இவங்களோடப் பழகறேன். உருவத்திலே ஒரே மாதிரி இருந்தாலும், நடை, பாவனை இதெல்லாம் வித்தியாசப்படுதே! ரெண்டு நாள் பழகினா உங்களாலையும் கண்டுபிடிக்க முடியும்."

"இத, இதத்தான் எதிர்பார்த்தேன். இந்த ரெண்டு பேரோடையும் நீங்க நல்லாப் பழகப் பழக, யார் வருண், யார் அருண்ன்னு நல்லாத் தெளிவாத் தெரியும். அதுக்கு நீங்க கூர்ந்து கவனிக்கிற அவங்களோட வித்தியாசமான நடை, பாவனை போன்றவைதான் காரணம். இதே போலத்தான், மாஞ்சியும், பைரவியும் ஒண்ணு போலத் தோணினாலும், கூர்ந்து கவனிச்சா, ரெண்டுக்குமமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதாவது ரெண்டு ராகத்துக்கும் scale கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், scaleலே உள்ள ஸ்வரங்களுக்கிடையேயான கமகம் வெவ்வேறயா இருக்கறதால, ரெண்டும் வெவ்வேற ராகமாக இருக்கு. இந்த scale மற்றும் கமகம் எப்படி உள்ளது என்பதைப் புரிஞ்சு கொண்டால் ஒரே மாதிரி இருக்கற ராகங்களுக்கிடையேகூட இருக்கற வித்தியாசம் என்னன்னு தெளிவாப் புரிஞ்சுடும். இப்ப ஒரளவு புரிஞ்சுதா? அது சரி. வருண், அருண் உதாரணம் எப்டீ?"

"சூப்பர்...."

"சூப்பரா?!"

"சூப்பர் மொக்கைன்னு சொல்ல வந்தேன்."

(தொடரும்)

- சிமுலேஷன்

2 comments:

இலவசக்கொத்தனார் said...

ரெண்டு பதிவா வெறும் இண்ட்ரோவே ஓடிண்டு இருக்கு. கொஞ்சம் பதிவைப் பெருசாப் போடலாமே. சீக்கிரம் மேட்டருக்கு வாங்கோ!

இலவசக்கொத்தனார் said...

எல்லாத்தையும் விட நான் குழம்புவது பூர்விகல்யாணி / பந்துவராளி. அதுக்கு எனக்குப் புரியற மாதிரி (வெறும் அந்த நிஷாதம் vs இந்த நிஷாதம் என்று இல்லாமல் இசையை முறையாகக் கற்றிராதவனுக்குப் புரியுமாறு சொல்லவும். ப்ளீஸ்)