
1924ஆம் வருடம், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள 'ஸாண்டா அனா' என்ற இடத்திலுள்ள YMCA அமைப்பில் வேலை செய்து வந்த 'ரால்ஃப் ஸ்மெட்லி' என்ற நபருக்கு ஒரு கவலை. அங்கு வரும் பெரும்பாலோனோருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு பேச்சுக் கலை சரியாக வரவில்லையே என்ற கவலை. இதற்காக ஒரு பயிற்சியினை ஆரம்பித்தால் என்னவென்று யோசிக்கின்றார். பேச்சுத் திறனையும், தலைமைப் பண்புகளையும் வளர்க்கும் நோக்கத்தில் "டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப்" என்ற புதியதொரு மன்றத்தினைத் துவக்குகின்றார்....