Monday, November 20, 2006

2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்

2007ஆம் வருடம் சென்னையில் இடைத்தேர்தல் ஒன்று வருகின்றது. வழக்கமாகவே, இடைத்தேர்தலுக்குண்டான பரபரப்பில் மத்திய, மாநிலக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கின்றன. வலைபதிவர்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக, இடைத் தேர்தலில் நிற்க சென்னை வலைப்பதிவர்கள் சங்கமும் தீர்மானம் செய்து, உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மனுச் செய்வதற்கும் அன்றே கடைசி நாள்.பாலபாரதி: இன்றைக்கு நாம ஒரு முக்கியமான வட்டத்தை அடைந்திருக்கின்றோம். அடுத்தபடியாக என்ன வட்டத்துக்குச் செல்வதுன்னு முடிவு பண்ணவேண்டிய நேரமிது. நான்...