
இன்றைக்குச் சரியாக 50 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத் தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோ, கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு. இந்தக் கதையையும், கல்கி இதழில் வெளிவந்த "ரோஜா" என்ற கதையையும், தினமணிக் கதிரில் வெளிவந்த "ஜோதி" என்ற கதையையும் விசா...