"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?" என்ற பாட்டிற்கேற்ப எல்லோரும் சொந்த ஊர் என்றால் உணர்ச்சி வசப்படுவது இயற்கை. அந்த ஊர் எவ்வளவு குப்பையாக இருந்தாலும், ஊர் அபிமானம் வருவதற்குக் காரணம், நினைவலைகள், ஆட்டோகிராப்ஃப், கொசுவத்தி etc...etc.
மேற்கண்ட வகையில் நான் பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையத்தின் மேல் எனக்கு ஒரு பாசம் உண்டு. கல்லூரிப் படிப்புகென்று சென்னைக்கு வந்துவிட்டாலும், பள்ளிக் காலம் முழுவதும் இங்கேதான். பள்ளிக் காலங்களில் வார விடுமுறைகளில்...