80கள். சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. மேதினக் கூட்டம். சிறப்பு அழைப்பாளர்கள் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களும். எம்.எஸ்.உதயமூர்த்தி தனது உரையில் வழக்கம் போல் வாழ்க்கையின் வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை எப்படித் தேவை என்றும், எப்படி மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஊக்கம் தரும் உரை ஒன்றினை நிகழ்த்தினார்.அடுத்து பேச வந்த தம்பிதுரை அவர்கள், "ஐயா சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். எல்லாத்துக்கும் மேல தேவையானது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நம்பணும். எனக்கு அந்த அதிர்ஷடம்...