
பொதுவாகவே பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும், 'பிராண்டட்' சட்டை பேண்ட் மற்றும் ஹோட்டல் வகையறாக்களுக்கு 1500-2000 ரூபாய் வரை செலவாவது வழக்கம். இந்த முறை சற்றே வித்தியாசமாகக் கொண்டாட எண்ணி, பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டு வேஷ்டி சட்டையுடன் முடித்துவிடத் திட்டம் போட்டேன். காரணம்*** இறுதியில் சொல்கிறேன். ஒரிரு நாட்கள் முன்பு தி.நகரில் கண்ணில் பட்ட ராம்ராஜ் ஷோ ரூமுக்குச் செல்ல எண்ணினேன். நடிகர் ஜெயராமை கலக்கலாக மாடலிங் செய்ய வைத்து, வேஷ்டி மார்க்கெட்டில்...