அரசர் அவுரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவராம். இருந்தாலும் அவருக்கு ஏனோ இசை என்றாலே ஆகாது. இசை, நாட்டியம் போன்ற எல்லாவித நுண்கலைகளையும் அவரது ஆட்சிக் காலத்தில் தடை செய்தாராம்.
அதே போல வலைப்பதிவுகளை தங்கள் இணைப்பிலே திரட்டிக் கொள்ளும் தமிழ்திரட்டிகள், இந்தப் பதிவுகளை வகைப்படுத்த நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், சினிமா, தொழில் நுட்பம், கார்ட்டூன், கவிதை, ஆன்மிகம் போன்ற எத்தனை, எத்தனையோ பிரிவுகள் வைத்திருந்தாலும் இசைக்கென்று ஒரு பிரிவு வைக்காததேன்? அவுரங்கசீப் வழித்தோன்றல்களோ இவர்கள்?
- சிமுலேஷன்
1 comments:
ஏனுங்க ஒழுங்காப் பாக்காம சொல்லிட்டீங்க போலிருக்கே. தமிழ்மணத்துல அழகா "இசை" அப்படின்னு ஒரு பிரிவு இருக்கே. ஆமா ஏன் கேக்குறீங்க, இசையைப் பத்தி எழுதப்போறீங்களா? நல்லா எழுதுங்க! http://tamilmanam.net/tags.html
Post a Comment