இந்தப் பாட்டு எனது குடும்பத்தில் பலரும் பாடும் பாட்டு. குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். குழந்தைகளைத் தூளியில் போட்டுத் தாலாட்டுப் பாடும்போது பயன்படுத்தும் பாடல். புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு, முதன் முதலாக பேருந்து இயக்கப்பட்டபோது யாரோ அதனைப்பற்றிப் பாடிய பாடலாம். இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் மேலதிக விபரங்கள் தெரிந்தால் தெரிவிக்கலாம்.
வா...வா...வாடி பொண்ணே
வந்திடு மோட்டார் வண்டியிலே
போவோம் நாம் பொன்னுரங்கம்
போற்றி செய்வாய் எந்தன் கண்ணே
வா...வா...
மோட்டார் வண்டியைப் பாரடியே
முன்னே நீ போய் ஏறடியே
மூட்டையடுக்காள் வேறடியோ
மேட்டிமையாய் உட்காரடியோ
வா...வா...
பாராய் டபுள்சார்ஜ் கொடுத்துவிட்டு
ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிவிட்டோம்
ஜோராய் வண்டியில் ஏறிவிட்டோம்
சொகுசாய் சேர்ந்து உடகார்ந்துவிட்டோம்
வா...வா...
போகுது பார்...வண்டி போகுது பார்
புதுமை மோட்ட்டர் போகுது பார்
அன்னமே வாய்மூடித் திறக்குமுன்னே
அம்மாசத்திரம் வந்த்துவிட்டோம்
என்னடி கீரனூர் தாண்டிவிட்டோம்
இதோ பார் திருச்சியைக் கண்டுவிட்டோம்
வா...வா...
எழுத்து வடிவில் கண்ட பாடலை, ஒலி வடிவிலும் கேளுங்கள்.
Va Va Vadi Ponne.w... |
- சிமுலேஷன்
2 comments:
நல்லாப் பாடியிருக்காங்க! ஆமா, அந்தக் காலத்திலேயே இங்கிலீஷ் கலந்து பாட்டு எழுதியிருக்காங்களே, டைமண்டு கவிஞரை மட்டும் ஏன் திட்டுறாங்க?
அக்கினிச் சித்தன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
- சிமுலேஷன்
Post a Comment