Tuesday, February 09, 2010

கமல் ஹாசனும், நானும், ராகசிந்தாமணியும்






சமீபத்தில் 'முத்துமீனாள்' எழுதிய "முள்" என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் (என் மனைவியின் தோழி சுபா மொழி பெயர்த்தது) வெளியீட்டு விழா புக் பாயிண்ட் அரங்கினில் நடைபெற்றது. கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர். விழா துவங்க சற்று நேரம் முன்பாகவே வந்திருந்த கமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் பரிசளித்தேன். ஒரிரு பக்கங்களைப் புரட்டிய பின், கர்நாடக இசை குறித்து சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டார். பின்னர் விழா துவங்கும் வரை எனது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். விழாவின் முடிவில் பதிவர்கள் துளசி கோபால், மதுமிதா, கவிஞர்கள் இன்பா சுப்ரமணியம், புதிய பார்வை கல்யாண்குமார் ஆகியோருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்தேன்.

- சிமுலேஷன்

4 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

KarthigaVasudevan said...

வாழ்த்துக்கள் .
இசை குறித்துப் புத்தகமா? வாசிக்கணுமே! எங்கே விற்பனைக்கு கிடைக்கும் உங்கள் புத்தகம்?

Simulation said...

அண்ணாமலையான்,

வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி!

- சிமுலேஷன்

Simulation said...

கார்த்திகா வாசுதேவன்,

வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி!

இந்தப் புத்தகம் தமிழ்த் திரைப்பாடல்களின் ராகங்களைக் குறித்தது. இதைப் பற்றிய ஒரு சிறு விமர்சனமும், புத்ததகம் கிடைக்குமிடம் பற்றிய விபரங்களும் கீழ்க்காணும் பதிவில் பாருங்கள்.

http://www.enidhi.net/2008/09/carnatic-music-guide-ragachintamani.html

- சிமுலேஷன்